ஒரு ஊரில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தார். அவருக்கு ஒரே மகன். மிகவும் செல்லமாக அவன் வளர்க்கப்பட்டான். பருவ வயது வந்தது அவனுக்குப் பொறுப்புத் தர எண்ணினார் அவர்.
ஆனால் மகனுக்கு உலக வாழ்க்கை இன்னதென்று விளங்கவில்லை. அவன் உலகத்தைத் தெரிந்த பின்பு அவருக்குப் பொறுப்புத் தரலாம் என்று எண்ணினார்.
அவனை ஒரு மாத காலம் சேரி மக்கள் வாழ்கின்ற பகுதியில் அந்த மக்களோடு மக்களாகத் தங்கி வாழ்ந்து பின்வருமாறு பணித்தார்.
ஒரு மாதம் ஆனபின்பு மகன் வீட்டுக்கு வந்தான். தந்தை கேட்டார் என்ன மகனே வாழ்க்கையில் என்ன கற்றுக்கொண்டாய் என்றார்.
நிறைய அவர்களிடம் அறிந்து கொண்டேன் அப்பா. அவர்கள் நம்மை விட பணக்காரர்களாகவும், சுதந்திர மானவர்களாகவும், சுகமாகவும், பயமற்றும் வாழ்கிறார்கள் என்றான்.
தந்தை எப்படிச் சொல்கிறாய் என கேட்டார்.
நாம் இங்க அலங்கார செயற்கை விளக்குகள் ஏற்றி வாழ்கிறோம். அவர்களோ நட்ச்சதிரங்களையே விளக்குகலாகக் கொண்டு வாழ்கிறார்கள்.
நாம் நமக்கான உணவையே விலை கொடுத்து வாங்கி உண்கிறோம். அவர்கள் தங்களுக்கான உணவைத் தாங்களே உற்பத்தி செய்கிறார்கள்.
நான் அறைகளுக்குள் வாழ்கிறோம். அவர்களோ சுதந்திரமாக சந்தோசமாக பரந்த வெளியில் வாழ்கிறார்கள்.
இப்பொழுது சொல்லுங்கள் தந்தையே அவர்களை ஏழை என்கிறார்கள்.
சுதந்திரமாகவும், சந்தோசமாகவும், தன் உணவைத் தாங்களே உற்பத்தி செய்பவராகவும், உறவுகளோடு ஒன்றி மகிழ்பவர்களாகவும் இருப்பவர்களை ஏழைகள் என்று எப்படி சொல்ல முடியும்? இவைதான் நான் அவர்களிடமிருந்து கற்றது என்றான்.
எனவே வாழ்க்கை என்பது சுதந்திரத்திலும் உறவுகளிலும் மலர்ந்திருக்கிறது.
.
20 கருத்துரைகள்:
அண்ணே அருமையான கதை . நல்லதொரு தத்துவத்தை சொல்கிறது பகிர்வுக்கு நன்றி .
தத்துவ கதை நடை அருமை
காலையில் நல்லதொரு கதையை படிக்க பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்.
கதை சொல்லும் வாத்தியார் ஆயிட்டீங்க போல
நல்ல கதை.
very nice...!
தத்துவம்....சிறப்பு
நல்ல கதை ! நன்றி நண்பரே!
புல்லரிக்குதுண்ணா!
தத்துவக்கதை !
நல்ல நடை!
அறிய வேண்டிய நீதி!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் பிரகாஷ்!அருமையான ஓர் வாழ்க்கைத் தத்துவக் கதையை,காலையில் படித்தது மனதுக்கு ஆறுதல்!நன்றி,பகிர்வுக்கு!வாழ்த்துக்கள்!
மிகவும் அருமையான நீதிக்கதை.
ஏதோ... சமூக விழிப்புணர்வுக் கட்டுரையென எண்ணிக்கொண்டுதான் தளத்திற்கு வந்தேன்.ஆனால், சிறு வயதில் படித்ததுபோல ஒரு அருமையான கதை வாசிக்க கிடைத்தது.
எப்ப தொடக்கம் இந்த வாத்தியார் வேலை மாப்பிள? ஹி ஹி !!
நல்லதோர் கதை..!!
கதை அருமை வாழ்த்துகள்
கதைகதைகதைகதை why!
அழகிய கருத்தாழமிக்க கதை. குட்.
உண்மை தான்.. இருப்பதைக் கொண்டு சிறக்க வாழ்பவர்களே.. செல்வந்தராய் சிறப்பாய் வாழ்கிறார்கள்.
நல்ல கதை.. நல்ல நீதி!
பகிர்விற்கு நன்றி!
ata asaththaringale... ungalaip partha poramaiya irukku.