CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 3


நம்ம நண்பர்கள் எல்லோரும் இருக்காங்களான்னு நம்பர் சொல்ல சொன்னப்போ நக்கீரனை காணவில்லை. அவர் எங்கே போனார்????????
எல்லோரும் போட்டோவுக்கு போஸ் தர சிபி மொபைலுக்கு போஸ் தாரார் போல!

ஹி... ஹி...அந்த மண்டபம் புல்லா தேடி ஒரு வழியா பாத்ரூமில் அவர கண்டுபிடிச்சோம். மறுபடியும் எல்லோரும் இருக்குற இடத்துக்கு வந்தா பாதி பேர காணல. எல்லா பயபுள்ளைகளும் அர்ஜென்ட்டா போயிட்டாங்க. அப்புறம் ஒரு வழியா எல்லோரும் அசெம்பிள் ஆயிட்டு மஹாலை விட்டு வெளியே வந்தா ஒரு கார் நின்னுட்டு இருந்துச்சு. உடனே மனோ வேகமா பேனட்ல ஏறி உட்கார்ந்தார். மனோ கார்ன்னு நெனச்சு சிபியும் ஏற முயற்சிக்க, யோவ், ஒரு போட்டோ எடுக்க காருக்கு வந்தா நீயும் பின்னாடியே வர்றீயே, என மனோ கலாய்க்க, சிபி நானும் போட்டோவுக்கு தான்யா வந்தேன் என சொல்ல,அவருடன் நாங்களும் இணைந்து கொள்ள  காருடன் கிளிக் செய்யப்பட்டது.  
கூலிங்கிளாஸ் போட மறந்த சிபி
மெட்ராஸ்பவன் சிவா ஐயாயிரம் தருவதாக சொன்னது மனோ மொபைலுக்கு தான்
 மனோ தனது பேஸ்புக் ஆயுதத்தால் எங்களை சுட்டார். (அதாங்க மொபைல்ல போட்டோ). கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு மண்டபத்திற்கு போனோம். கொஞ்ச நேரத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது. ஆபிசர் மேக்கப் அளவா போட்டு இளமையாக இருந்தார். ஈவ்னிங் ரிசெப்சனுக்கு வருவதாக அவரிடம் சொல்லி விட்டு அவரவர் ரூமுக்கு வந்தோம். 

சும்மா ஒரு கிரியேட்டிவிட்டி. ஹி..ஹி...
நாங்கள் அவரவருக்கு தேவையான அளவு பானங்களை அடித்துவிட்டு பிரியாணி, சிக்கன் என புல் கட்டு கட்டிவிட்டு தூங்கிப் போனோம். ஈவ்னிங் எல்லோரையும் எழுப்பி மகாலுக்கு கூட்டிட்டு போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு.  சிபி காலையில் பவுடரை அப்பியது போல மாலையும் அப்பிக் கொண்டிருக்க, போட்டோ எடுத்திருவோம்னு பயமுறுத்தியவுடன் பவுடரைக் குறைத்தார். 
மதிய உணவாக பிரியாணி
 மகாலில் பிரபுவும், கௌசல்யா அக்காவும் மரக்கன்றுடன் இருந்தார்கள். காலை முதல் அவர்கள் விருந்தினர்களுக்கு பசுமையை பரிசாக தந்து கொண்டிருந்தார்கள். கூடல் பாலா போனில் இருமுறை பேசினார். அவரது ஊருக்கு கடைசி பஸ் டைம் ஆச்சுன்னு கிளம்பிட்டேன் என சொன்னார். 
விஜயன் மற்றும் வெடிவேல் ஐயாவுடன்

யானைக்குட்டி ஞானேந்திரன் குடும்பம் சகிதம் வந்திருந்தார். பதிவுலக நண்பர்களைப் பார்த்ததில் அவருக்கு மிக மகிழ்ச்சியாக இருந்ததாக சொன்னார். அனைவரிடமும் கலகலப்பாக பேசினார். ஜோஸ்பின் கதைக்கிறேன் ஜோசப்பின் அவர்களும் குடும்பம் சகிதம் வந்திருந்தார். ஏற்கனவே போன வருஷ நெல்லை சந்திப்பில் நாங்கள் பார்த்திருந்ததால் உடனே அறிமுகம் ஆயிட்டோம். பின்னர் ஒவ்வொருத்தரையும் தனித்தனியே பெயர், பிளாக் பெயர் என கேட்டுக் கொண்டார்.
யானைக்குட்டி ஞானேந்திரனுடன் ராஜா

துபாய் ராஜா என்ற பதிவர் எங்களிடம் அறிமுகம் ஆனார். அனைவரது பதிவுகளையும் வாசித்திருப்பதாக சொன்னார். மனோ, பேஸ்புக் புகழ் விஜயன் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். மனோ மகளிடம் அப்பா மாங்காய் தந்தாரா என கேட்டால் இல்லை என சொன்னார். அட, பேஸ்புக்ல மகளுக்கு உப்பு காரம் போட்டு தந்ததா ஸ்டேடஸ் போட்டிருந்தது சும்மா என மனோ சொல்ல ஒரே ரகளையா இருந்துச்சு. IQ-225 level சாதனை பெண் விசாலினி பெற்றோருடன் வந்திருந்தார்.
IQ-225 level சாதனை பெண் விசாலினி
 மேடையேறி மனமக்களிடம் கிப்ட் அளித்துவிட்டு ஆபீசரிடம் ஒவ்வொருத்தரா விடை பெறவே அந்த மேடை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. இன்னிசை கச்சேரியில் மேலோடி மெட்டுகள் முதல் குத்து மெட்டுக்கள் வரை களை காட்டிக்கொண்டிருந்தது. அவர்களையும் கிளிக் செய்தோம். நானும் சுரேஷ்ம் விஜயனிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போ விஜயன் சுரேஷை பார்த்து நீங்க யாருன்னு கேட்க நாங்க சிரிச்ச சிரிப்பில் விஜயன் ஒரு மாதியா ஆனார். நான் வீடு சுரேஷ் என அவர் சொல்ல, அட பேஸ்புக்ல சண்டை போட்டுட்டு இவ்ளோ நேரமா யாருன்னு தெரியாம பேசிட்டு இருந்தேனே என விஜயன் அதிர்ச்சி அடைந்தார். 
டின்னரை ரசித்து சாப்பிடும் நக்கீரர், ராஜா
பின்னர் அனைவரும் டின்னர் சாப்பிட சென்றோம். சிபி மட்டும் தனியாக ஒரு மூலையில் சாப்பிட இடம் பிடிச்சார். எங்களுக்கு முன்னாடி சாப்பிட உட்கார்ந்த அவர் நாங்க சாப்பிட்டு முடிச்சு கால் மணி நேரம் கழிச்சே சாப்பிட்டு முடிச்சார். மனோவும், கருனும் சாப்பிடவில்லை. என்ன மர்மம் என தெரியவில்லை. 
ஆபீசருடன் விடைபெறுகையில்
இன்னிசைக் கச்சேரி முடியும் தருவாயில் விருந்தினர்களை நடனம் ஆட குழுவினர் அழைக்க ஒரு சின்ன பெண் முன் வந்தார். கலாசலா கலசலா  என பாட்டு அதிர ஆட்டம் ஆரம்பமானது. நடுவில் சௌந்தரும் டான்ஸ் ஆடினார். நெல்லையை விட்டுச் செல்லும் நேரம் நெருங்க மறுபடியும் ஆபீசரிடம் விடைபெற்றுக் கொண்டோம். கருனும், சௌந்தரும் கன்னியாகுமரிக்கு பிளான் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு நெல்லை ஜங்க்சனுக்கு சென்றோம் நெல்லையின் பாரம்பரியமான அல்வாவை வாங்கிக் கொண்டு...
கச்சேரியில்  நடனம்:
ஒரு நாள் எப்படி போச்சுன்னே தெரியல. ஆபிசரின் அன்பான வரவேற்பு, ருசியான உபசரிப்பு, முகம் பார்க்காமல் நண்பர்களாக இருந்த பதிவர்கள் முகம் பார்த்து கலாய்த்த தருணங்கள் என நெல்லைப் பயணம் வாழ்வில் மறக்க முடியாத பயணமாய் இருந்தது.
 -End-
முந்தைய  பாகங்களுக்கு:
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2
மேலும் வாசிக்க... "நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 3"நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2

1. சிபி எந்த ஊருக்கு போனாலும் ஒரு கடைக்கு மறக்காம போறார். என்ன காரணம்???
2. மனோ மொபைல் மெமரி கார்டுக்கு விலை ஐயாயிரம். ஏன்?
மேற்கண்ட  இரண்டு கேள்விகளுக்கும் பதில் இந்த பதிவில்...

24/04/2012 செவ்வாய் காலை எட்டு மணிக்கு கருண் போன் செய்து மச்சி ட்ரெயின் எக்மொர்ல கிளம்பிருச்சு. மதுரைக்கு ஈவ்னிங் போர் தர்ட்டிக்கு வந்திரும், கரெக்டா வந்திருடான்னு சொல்ல, ரைட்டுயான்னு சொல்லி போனை கட் பண்ணிட்டு தூங்கிட்டேன். ஆமாங்க நைட் டூட்டி பார்த்ததால தூக்கம். ஈவ்னிங் மூட்டை முடிச்ச தூக்கிட்டு கூடல்நகர்ல இருந்து ஜங்சனுக்கு வந்து சேரும் போது நல்லா மழை பெய்ய ஆரம்பிச்சது. நனஞ்சுட்டே ரெண்டாவது பிளாட்பாரம் போயி நிக்க பத்து நிமிசத்துல ட்ரெயின் வந்துச்சு. கருண், சௌந்தர் உடன் கூட்டணி சேர்ந்தாச்சு. விடாது மழையுடன் ட்ரெயின் மதுரையிலிருந்து கிளம்பியது. நக்ஸ்ம் ராஜபாட்டையும் மயிலாடுதுறை பேசஞ்சரில் பஞ்சராகி வந்திட்டு இருப்பதாக போன்ல அப்டேட் செஞ்சாங்க.
விருதுநகர் ஜங்சனில் கொட்டும் மழையில் சௌந்தர்
நெல்லை வந்து சேரும் போது மழை பெய்துவிட்டிடுச்சு. எங்களுக்கு போட்ட ரூமுக்கு போயிட்டு ரெப்ரெஷ் ஆயிட்டு லைட் டிபன் சாப்பிட்டுட்டு நல்லா தூங்கியாச்சு.
வேடந்தாங்கல் கருண், சௌந்தர், நான்

பவுடரை குறைத்த பின் சிபி

சுரேஷ்'ம் நானும்

25/04/2012 காலை, வீடு சுரேஷ், சிபி, தமிழ்பேரன்ட்ஸ் சம்பத் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். சிபி பேர்அன்ட்லவ்லி, பவுடர் போட்டு செம தூக்கலா இருந்தார். அண்ணே, கொஞ்சமா தொடச்சுக்கங்க என எல்லோரும் கோரசா சொல்ல மேக்கப் கண்ணாடியை கொஞ்ச நேரம் அழ வச்சிட்டு வந்தார். கண்டிப்பா கோயிலுக்கு போகனும்னு சிபியின் கண்டிசனோட பக்கதிலிருந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு இருக்கறப்போ திடீர்னு சிபிய காணோம், என்னடா இது கோயிலுக்கு போகனும்னு சொன்ன மனுஷன காணோம்னு சுத்தி முத்தி தேடுனா ஒரு மெடிக்கல் ஷாப் கடையில என்னமோ வாங்கிட்டு இருந்தார். 
இவருக்கு மட்டும்  மெடிக்கல்ஷாப்ல என்னமோ வச்சிருக்காங்க போல!

இந்த மனுஷன் ஈரோட்டுலயும் மெடிக்கல் ஷாப்ல என்னமோ வாங்கினார். இங்க நெல்லையிலும் ஏதோ பர்ச்சேசிங். கேட்டா கேமராவுக்கு பேட்டரி வாங்குனேன்னு சொல்றார். என்ன மர்மமோ? கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வெளிய வர சிபி திடீர்னு ஒரு காரை கட்டிப்பிடிச்சார். என்னான்னு கேட்டா ஹி..ஹி.... போட்டோ எடுயா, கார் கூட போஸ் தர்றேன்ல, என காமெடி செய்தார். இந்த போட்டோவை வீடு சுரேஷ் பக்காவா கிராபிக்ஸ் செய்து அவர் பிளாக்கில் வெளியிடுவதாக சொல்லி இருக்கார்.
ஐ.. ஐ... காரு... காரு....
 நக்ஸ் எங்கன்னு நீங்க கேட்கறது தெரியுது. அவர போன் போட்டு எழுப்பியும் இதோ வரேன்னு சொல்லிட்டு இருந்தார். ஆனா எங்களுடன் இணையவில்லை. பஸ் ஏறி மகாலுக்கு சென்றோம். வாசலில் ஆபீசர் வரவேற்று டிபன் சாப்பிட அழைத்து சென்றார். கேசரி, இட்லி, பொங்கல், வடை என சிம்பிள் வித் டேஸ்ட்டி ப்ரேக்பாஸ்ட் சாபிட்டோம். 
சம்பத், சுரேஷ், மனோ, பிரபு கிருஷ்ணா
கற்போம் பிரபு என்ற பலே பிரபு என்ற பிரபு கிருஷ்ணா எங்களை வரவேற்று காபி கொடுத்தார். மனதோடு மட்டும் கௌசல்யா அக்காவும் அங்கே வர, மனோ திடீரென எங்கிருந்தோ வந்து ஆஜரானார். மெட்ராஸ்பவன் சிவா அவரது கேமரா மெமரி கார்டுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு தருவதாக சொல்லி இருந்தார். ஆனா அவர் கையில் கேமரா இல்லை. அதுக்காக நக்ஸ் ரொம்பவே மாஸ்டர்பிளான் செஞ்சு வச்சிருந்ததா அப்புறமா சொன்னார். ஆளாளுக்கு ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சுட்டே நல்லா டைம்பாஸ் ஆச்சு. ஸ்ரீவில்லிபுத்தூர் நடராஜன் அவர்கள் அவரது துனைவியாருடன் வந்திருந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நடராஜன் ஐயா, அவர் துனைவியாருடன் நாங்கள்
நக்ஸ்ம் ராஜபாட்டையும் எங்களோட சேர்ந்துகிட்டாங்க. யோவ், தனியா விட்டுட்டு வந்துடிங்களேன்னு அவரு கதற நம்ம வீடு சுரேஷும், சம்பத் அவரை கூல் செய்தார்கள். அவரு மனோ கேமரா எங்க, எங்க என தீவிரமா தேட, மனோ கூலா மொபைல் மூலமா போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சார். ஆகா, இந்த கேமரா தான் மனோ பிளாக், பேஸ்புக்ல சுத்தி சுத்தி வருதான்னு அவர் மொபைலை ஆட்டைய போட மனோ பின்னாடியே சுத்திட்டு இருந்தார். மனோவிடம் விசயத்தை சொல்ல உஷாராகி வேற பக்கமா உட்கார்ந்தார்.
நக்கீரனை பார்த்து மனோ ஆச்சர்யப்படுகிறார்

சிபி  தன் ஆண்ட்ராய்டு மொபைலுடன் ரொம்பவே கொஞ்சிக் கொண்டிருந்தார். அப்புறமா திடீர்னு ஒருத்தருக்கு போன் போட்டு என்னமோ குசுகுசுன்னு பேசினார். ஓட்டு கேட்டப்போ தனது பாஸ்வேர்ட் சொல்லிட்டு இருந்தார். போஸ்ட் போட. திருமண சடங்குகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. அதற்கிடையில் சிபி கையில மொபைலும் வாயில பல்லுமா ரொம்பவே துள்ளினார். என்ன என்ன என எல்லோரும் பதறி கேட்க, அவரோட போஸ்ட் பப்ளிஷ் ஆகி மொத கமென்ட்டும் வந்திருச்சுன்னு கூலா சொன்னார். 
தனது ஆண்ட்ராய்டு மொபைலுடன்கொஞ்சிக் கொண்டிருக்கிறார்

சிபி மொபைலுடன் கொஞ்சுவதை ரசிக்கும் சம்பத், நக்ஸ்

போஸ்ட் பப்ளிஷ் ஆச்சு, கமென்ட்டும் வந்தாச்சு. ஹே.. ஹே.. ஹே..
அடங்கோ, நக்கீரர் டென்சன் ஆக அவரையும் கூல் பண்ண போனா அவரும் மொபைலில் ஏதோ ஒரு பதிவை ரீடரில் வாசித்து கொண்டிருந்தார். அவரை நாங்க முறைக்க, ஹி..ஹி..ன்னு வழிஞ்சார். அது என்ன பதிவுன்னு கீழே போட்டோல பாத்து தெரிஞ்சுக்கங்க. 

நக்ஸ் மொபைலில் என்ன படித்தார்? நக்சஸிடம் போனில் கேட்கவும்
மண்டபம் போரடிக்க எல்லோரும் மகால் என்ட்ரன்ஸ்க்கு வந்தோம். அங்க பிரபுவும், கௌசல்யா அக்காவும் செடிகளுக்கு மத்தியில நின்னுட்டு இருந்தாங்க. என்னான்னு விசாரிச்சா பசுமை விடியலின் பிட் நோட்டிஸ் தந்து எல்லோருக்கும் ஒரு மரக்கன்று திருமண பரிசா தந்துட்டு இருந்தாங்க.
நம்ம நண்பர்கள் எல்லோரும் இருக்காங்களான்னு நம்பர் சொல்ல சொன்னப்போ நக்கீரனை காணவில்லை. அவர் எங்கே போனார்????????
அடுத்த பாகத்தில்....

மேலும் வாசிக்க... "நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2"நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்,
நேற்று 25-04-2012 நெல்லை மாநகரத்தில் நமது உணவு ஆபீசரான திரு. சங்கரலிங்கம் அவர்களின் மகள் திருமணம் இனிதே விமரிசையாக நட��்தது. அவரது அழைப்பிற்கேற்ப நமது பதிவுலக நண்பர்கள் வந்திருந்து ஆபீசர் வீட்டு விழாவை சிறப்பித்தார்கள்.
ஆபீசர் எங்களை வரவேற்கிறார்காலை பத்து மணி அளவில் முகூர்த்தம். ஆபீசர் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார். 

night dinner
மாலை ஆறு மணிக்கு மேல் வரவேற்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இன்னிசைக் கச்சேரியுடன் மாலை வேளை சூப்பராக களை கட்டியது. டின்னர் சாப்பாடு செம சூப்பர். காலை டிபன், மதிய லஞ்ச் என அனைத்துமே செம. 

இன்னிசை நிகழ்ச்சி

நண்பர்களே, இன்னும் விரிவான பதிவுகள் அடுத்தடுத்து தொடரும். நன்றி.

டிஸ்கி:
1. சிபி எந்த ஊருக்கு போனாலும் ஒரு கடைக்கு மறக்காம போறார். என்ன காரணம்???
2. மனோ மொபைல் மெமரி கார்டுக்கு விலை ஐயாயிரம். ஏன்?
3. கேஆர். விஜயன் அதிர்ச்சி. ஏன்?
4. இன்னிசைக் கச்சேரியில் அலப்பறை டான்ஸ் (வீடியோவுடன்), யாரது?

மேற்க்கண்ட கேள்விகளுக்கு விடை அடுத்த பாகங்களில்......
மேலும் வாசிக்க... "நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1"நெல்லையை கலக்க போகும் பதிவர்கள்! அலப்பறை ஸ்டார்ட்

கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் மீண்டும் ஒரு நெல்லை பயணம். நம்ம உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம். அவரது இனிய அழைப்பிற்கினங்கி எல்லா பதிவுலக தோழர்களும் ஒன்று கூடி சிறப்பிப்போம்.
நெல்லையில் பக்ரைன் மக்கா மையம் கொண்டு வருகிற பதிவுலக நண்பர்களுக்கு வேண்டிய அனைத்து(?!)தேவைகளையும் செய்திருப்பதாக உளவுத்துறை அறிவித்துள்ளது.

விஜயன் அவர்கள் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் மேல் ஸ்டேடஸ் போட்டு பேஸ்புக்கை கலக்கி வருகிறார்.

நண்பர்கள் கருன், சௌந்தர், சிபி, மனோ, சுரேஷ், சம்பத், நக்கீரர், ராஜபாட்டை, கூடல் பாலா, வைரை சதீஷ், விஜயன், கற்போம் பிரபு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்தினவேல் ஐயா என இன்னும் பல பதிவர்கள் நெல்லையை மையம் கொள்ள வருகிறார்கள். இவர்களோடு நானும் இணைகிறேன்,

சரி, நண்பர்களே, நீங்கள் ஆவலுடன்? எதிர்பார்க்கும் நெல்லையில் பதிவர்களின் அட்டகாசங்கள் பதிவாக? தொடராக? வர இருக்கிறது. படித்து கொள்ளு(ல்லு)ங்கள்.

எல்லா வளங்களும் பெற்று சிறக்க மணமக்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மேலும் வாசிக்க... "நெல்லையை கலக்க போகும் பதிவர்கள்! அலப்பறை ஸ்டார்ட்"அழகு அதிகரிக்கனுமா பெண்களே? அரட்டைக் கச்சேரி!

சின்ன பாப்பா: அக்கா... அக்கா... வீட்டுல இருக்கிங்களா? அக்கா? (ச்சே... இந்த குண்டம்மாவுக்கு போன் பண்ணாம அவ வீட்டுக்கு வந்தது ரொம்ப தப்பா போச்சே. கதவ சாத்திக்கிட்டு என்ன தான் பண்றாளோ? காலிங் பெல் சத்தமும் காதுல விழல போல...)
பெரிய பாப்பா: அடியே, இருடி... வரேன், ஸ்டவ் ஆப் பண்ணிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்கூட பொறுக்க மாட்டியாடி? என்னடி விஷயம், போன் கூட பண்ணாம வந்திருக்க?


சின்ன பீப்பா: ஒன்னுமில்ல அக்கா, இங்க பக்கத்துல என் சொந்தக்காரங்க இருக்காங்க, அவங்கள பாக்க வந்தேன். அப்படியே இங்க வந்தேன்.


பெரிய பீப்பா: ஓ... அப்படியா, ஏண்டி இந்த கரண்ட் கட் இப்படி பாடா படுத்துதே... எப்படி சமாளிக்கற?


சின்ன பீப்பா:எப்படியோ சமாளிக்க பழகிகிட்டேன். கரண்ட் இருக்கும் போது, நான், பிள்ளைங்க. அவருன்னு வேலைகளை பிரிச்சு ஒவ்வொருத்தரும் பாத்கிருவோம். அதனால வேலைகள் சரியா முடிஞ்சிரும் அக்கா.


பெரிய பீப்பா: ம்ஹும். உங்க வீட்டுல எல்லோருமே வேலை பாக்கரின்களா? உன்ன பாத்தா பொறாமையா இருக்குடி, உனக்கு வாய்ச்சவர் அப்படி...


சின்ன பீப்பா: ஏன் அக்கா அப்படி சொல்றிங்க, உங்க வீட்டுக்காரர் ஒன்னும் செய்ய மாட்டாரா?


பெரிய பீப்பா: என்னைக்காவது வீட்டு வேலை செய்வாரு. ஆனா நாம எதிர்ப்பாக்கும் போது செய்ய ரொம்ப பிகு பண்ணுவாரு.


சின்ன பீப்பா: நீங்க பாவம் அக்கா. சரிக்கா, என்ன சமையல் இன்னைக்கு?


பெரிய பீப்பா: அதுவா சுண்டல் குழம்பு தான் வச்சேன். சரி,சரி வா சாப்பிடு, சாப்ப்டுட்டே பேசலாம்.


சின்ன பீப்பா: எந்த குழம்பு வச்சாலும் நீங்க ருசியா தான் வப்பிங்க அக்கா..


பெரிய பீப்பா: ஏண்டி இந்த ஓகே ஓகே படம் நல்லா இருக்காமே, அப்படியா?


சின்ன பீப்பா: ஆமா அக்கா, நாங்க பார்த்துட்டோம், கதை அப்படி ஒன்னும் இல்லையாட்டியும் பொழுதுபோக்கு படமா இருக்கு.


பெரிய பீப்பா: ஓ.. நீ பார்த்துடியா! நானும் கேள்விப்பட்டேன், பார்க்கலாம்னு..


சின்ன பீப்பா: ஆமா, பாக்கலாம் தான்... ஸ்டாலின் மகன் உதயநிதி பரவாயில்லாம நடிச்சிருக்கார். ஹன்சிகா பொண்ணும் பரவாயில்ல, சந்தாணம் செம கலக்கல் அக்கா.


பெரிய பீப்பா: ம்ம்ம்... அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கார்.


சின்ன பீப்பா: ம். அப்டியா! ஓகே ஓகே... அக்கா உங்களுக்கு ஒரு அழகு டிப்ஸ் சொல்லட்டா...


பெரியபீப்பா: ம்ம்ம்... சொல்லுடி,


சின்ன பீப்பா: மொதல்ல நீங்க உங்க வீட்டுக்காரர் மேல காட்டுற டென்ஷனை குறைங்க, அதுவே போதும்.. ஹி.. ஹி...


பெரிய பீப்பா: என்னடி சொல்ற, அவரு சொல்ற பேச்சு கேக்க மாட்டாரு. அதுக்காக நான் கொவப்படக் கூடாதா?


சின்ன பீப்பா: அக்கா, கோவப்படுங்க, செல்லமா கோவப்படுங்க, உங்க உடம்பு அதிர்ற மாதிரி ஆக்ரோசமா கோவப்படாதிங்க, அதனால உங்க அழகே கொறஞ்சு போயிரும்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.


பெரிய பீப்பா: அப்படியாடி.. சரிடி, கொறச்சுக்கறேன், ஏண்டி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?


சின்ன பீப்பா: சொன்னாத்தானே தெரியும் அக்கா?


பெரிய பீப்பா: சொல்றேண்டி.. கேஸ் கெடைக்க ரொம்ப தட்டுப்பாடா இருக்குல. அதனால அடுப்பே இல்லாம சமைக்கலாம். ரொம்ப ஈசியானது தான்.


சின்ன பீப்பா: என்னக்கா சொல்ற? அடுப்பே இல்லாம சமையலா? சான்சே இல்லை. கடையில வேணா வாங்கி சாப்பிடலாம். வேற ஒன்னும் செய்ய முடியாது.


பெரிய பீப்பா: அடியே, சொல்றத கேளுடி, இயற்கை உணவுகள் தான் அது. ஆனா பிரியாணி முதல் அல்வா வரை அடுப்பே இல்லாம சமைக்கலாம். அதாவது இயற்கை காய்கறிகள், மசாலாக்கள், பழங்கள், அவல் என இதெலாம் வச்சு பல வகையான உணவுகளை ரெடி பண்ணலாம். இந்தா இந்த புக்ல பாரேன், எத்தனை டிஸ் போட்டிருகாங்கன்னு..


சின்ன பீப்பா: அட, ஆமாக்கா நிறைய டிஸ் இருக்கு, இது எதுக்குமே அடுப்பு தேவையில்லைங்கறது தான் ஸ்பெஷல்..


பெரிய பீப்பா: ஆமாண்டி... ஏண்டி, ஏதோ போன் சத்தம் கேட்குதே, உன்னோடதா?


சின்ன பீப்பா: அட, என் ரிங் டோன் தான் கேட்குது. யார் கூப்பிடராங்கன்னு தெரியலையே.


பெரிய பீப்பா: ஏண்டி, போனை எடுத்துப் பாருடி, அப்பதானே தெரியும்...


சின்ன பீப்பா: அயோ,அக்கா அவரு கூப்பிடறார், என்ன சொல்லப்போறார்னு தெரியலையே?
(சின்ன பீப்பா போனில் ஹலோ சொல்கிறாள். ஆனால் பிறகு பேசவில்லை, ம்ம்ம் என மட்டுமே சொல்கிறாள்)


பெரிய பீப்பா: என்னடி ஒண்ணுமே பேசாம இருக்க?


சின்ன பீப்பா: அக்கா இங்க வர்ற அவசரத்துல வீட்டு சாவிய கொண்டு வந்துட்டேன். எபப்வுமே பக்கத்து வீட்டுல தந்திட்டு வருவேன். இன்னைக்கு மறந்துட்டேன். அவரு போன்ல பரேடு எடுக்கிறார் அக்கா...


பெரிய பீப்பா: அடிப்பாவி, இப்படி செய்யலாமா? சீக்கிரம் கிளம்பு, இன்னொரு னால் பாக்கலாம்.


சின்ன பீப்பா: அக்கா, அவரே இங்க வராறாம். என்னை இந்த வெயிலில் வர வேணாம்னு சொல்லிட்டார்.


பெரிய பீப்பா: அட, அப்ப தப்பிச்ச....


சின்ன பீப்பா: அட போங்கக்கா, வீட்டுல போயி இருக்கு. இங்க வந்ததையும் அவர் கிட்ட சொல்லல. என்ன சொல்லப் போறார்ன்னு தெரியல.


பெரிய பீப்பா: நான் சொல்ற மாதிரி சொல்லுடி அவர் கிட்ட,


சின்ன பீப்பா: என்னான்னு சொல்ல?


பெரிய பீப்பா: ரொம்ப டென்சன் ஆனா அழகு குறஞ்சிரும்னு சொல்லுடி, அதனால கொவப்படாதிங்கன்னு சொல்லுடி,,,


சின்ன பீப்பா: அக்கா, என் டிப்ஸ் எனக்கே ரிப்பீட்டா? அக்கா, வெளிய ஏதோ பைக் சத்தம் கேட்குது. அவர் வந்துட்டார்ன்னு நினைக்கிறேன். அவர் கோவமா இருந்தா ஏதாவது சமாளிக்கணும் அக்கா.....
(சின்ன பீப்பா கணவர் வர, சின்ன பீப்பா அவருடன் கிளம்புகிறார்)
மேலும் வாசிக்க... "அழகு அதிகரிக்கனுமா பெண்களே? அரட்டைக் கச்சேரி!"சீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி!

          சுமார் 5000கிமீ தூரம் பாய்ந்து பக்கத்து நாடுகளை தாக்கும் வகையில் நவீன ரக அக்னி - 5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிக்கரமாக முடித்துள்ளது. இந்த ரக ஏவுகணை மூலம் அணுகுண்டுகளை சீனாவின் எந்த பகுதிகளிலும் தாக்கலாம். அந்த அளவு தூரமாக பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணை நேற்று காலை ஒடிசா மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டது. திட்டமிட்டபடி இலக்கை தாக்கி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.
AGNI-V
இந்த வகை அதிநவீன ஏவுகணை மூலமாக நவீன ஏவுகணைகள் வைத்திருக்கும் உலக பெரும் நாடுகளான அமேரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா நாடுகளுடன் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது. இந்த ஏவுகணை சுமார் ஒரு டன்னுக்கும் அதிகமாக ஆயுதங்களை தாங்கிச் சென்று அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன் இந்தியாவிடம் குறைந்த தூரமே தாக்கும் வகையில் ஏவுகணைகளே இருந்தது. இந்த நவீன அக்னி-5 மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில், உதாரணத்திற்கு பக்கத்தில் உள்ள சீனாவின் எந்த பகுதிகளையும் துல்லியமாக தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு வகையான சோதனைகள் நடத்தப்பட இருப்பதாகவும், அவை முடித்து இன்னும் இரண்டு ஆண்டுக்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த அக்னி-5 ஏவுகணை முற்றிலும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் நம்மால் அதி நவீன ரக ஏவுகணைகளும் தயாரிக்க முடியும் என உலகிற்கு அறிய வைத்துள்ளோம் என்பதில் ஒரு இந்தியனாக பெருமை கொள்ளுங்கள் நண்பர்களே!  ஜெய்கிந்த்!!
மேலும் வாசிக்க... "சீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி!"இந்த ரோஜா எப்படி உருவானது?

இலையிலிருந்து ரோஜா பூக்கள் செய்வது எப்படின்னு இந்த படங்கள் பார்த்து தெரிஞ்சுக்கலாமா?
படங்கள்: மையிலில் வந்தவை.
மேலும் வாசிக்க... "இந்த ரோஜா எப்படி உருவானது?"பன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்டிங். Full chat details.

டிஸ்கி: நேத்து என்னிடம் ஒரு பதிவர் சாட்டில் வந்தார். பேச்சு கோக்கு மாக்காக போனது. அவரிடம் பேசியது பதிவாக.. ஹி...ஹி... ஐயோ, ராமா... சம்பத்தப்பட்ட பதிவர்கள் மன்னிக்க.... ஹி..ஹி....
me: ஊட்டுக்காரர் என்னா பண்றாரு?

 Sr: தோசை சாப்பிட போனங்க
 me: முட்டை தோசையா?
 Sr: நான் முட்டை தோசை
me: எத்தன முட்டை
 Sr: மக்கா முட்டையில்லாத தோசை
 நான் டயட்ல இருக்கிறேன்
 me: டயட்டா?
அப்போ திருநெல்வேலிக்கு உங்க தம்பி வருவார் போல...
 Sr: ஆமாம் 40 தோசைதான் சாப்பிட்டேன்
  திருநெல்வேலிக்கு வருவேன் 4பந்தியில மட்டும் தான் சாப்பிடுவேன்
me: பத்து பந்தி போடராங்கலாம்ல
 Sr: வழக்கமா எல்லா பந்தியிலும் சாப்பிடுவேன் டயட் என்பதால் குறைவு
 me: ஆபீசர் கிட்ட சொல்லி எலா பந்தியிலும் உங்களுக்கு இடம் கேட்டு வாங்கியிருங்க
Sr: ஆபிசர் வீட்டு கல்யாணத்தை சிறப்பா எப்படி நடத்தறதாம்
 me: அதானேSr: சாப்பிட்டாச்சா....?மக்கா
 me: ம். இட்லி/சிக்கன் குழம்பு
 Sr: வழக்கம் போல 10தட்டுதானே
 me: ஹே ஹே ஹே
'உம்ம மாதிரி இல்லை, வழக்கமா நாலே நாலு இட்லி
 Sr: இன்னிக்கு மதுரையில சிக்கன் தட்டுபாடு ஆயிருச்சாம் ஏய்யா இந்த கொலைவெறி
 me: ஆமாயா
 Sr: நீர் இப்படியே சாப்பிடும் வெடிக்க போற...ஹஹஹஹme: உங்க ஊர்க்காரங்க இங்க வந்து வண்டி வண்டியா வாங்கிட்டு போயிட்டாங்கலாமே
 Sr: நமக்கு சிக்கன் கட்டுபடியாகது ஒன்லி எருமைதான்
me: ஓ அதான் போன வாரம் மதுரையில எருமை மாடுக பத்து காணாம போச்சுன்னு பேப்பர்ல போட்டிருந்தான்,
இப்ப தாம்ல புரியுது
  எல்லாமே திருப்பூர்க்கு பார்சல் ஆயிருச்சுன்னு
 Sr: ஆமா பன்றி காய்ச்சலுக்கு பன்றி கறி சாப்பிடலாமா?
புதுசு புதுசா காய்ச்சல் பேரு சொல்லராய்ங்க
  பறவை பன்றி நரி கீரின்ட்டு
 me: என்ன புது காய்ச்சலா? என்ன பேருயா?
கீரி காய்ச்சலா? அதையும் விட்டு வைக்கலியா நீங்க
 Sr: நம்ம கொவைக்காரர் சொன்னாருய்யா என்னவோ டோங்கிரியாம்ல
me: நம்ம மாம்ஸ் உங்களுக்கு கீரி கறி பார்சல் பண்றப்பவே
 Sr: வென்ட்றி.....அடச்சே இன்னா பேருய்யா வாய்லையே நுழைய மாட்டிங்குது
 me: நெனச்சேன்
Sr: செங்கோவி என்ன சீரியஸ் பதிவா போடுறாரு
  ஹலோ...என்னயா மட்டையா
 me: செங்கோவி, விமர்சனம், எழுத்தாளர் பத்தி போட்டது சீரியஸா? கொடுமையடா சாமி..
போன் செய்தேனே? போன் எங்க போச்சு
எடுக்க மாட்டறிங்க?
 Sr: என்ன போன்
  இருங்க வர்ர

me: ஏம்பா போனையும் சேர்த்து முழுங்கிட்டின்களா?
 Sr: போனை காக்கா தூக்கிட்டு போயிருச்சு...
 me: அட பாவமே, அந்த காக்காவுக்கு வடை கிடைக்கலியா?
Sr: அதோட லவ்வருக்கு மிஸ்டு கால் வுட்டுட்டு தருதாம்...
me: உம் போன்ல மிஸ்டு கால் தர்ற அளவுக்கு பேலன்ஸ் இருக்கா?
  ஆச்சர்யம்ல...
 Sr: அதெல்லாம் நல்ல நிக்க வெச்சா பேலன்ஸ் பண்ணி நிக்கும்
me: அடங்கோ... பேலன்ஸ் இல்லைங்கறத மீசையில மண் ஒட்டாத மாதிரி சொல்றிங்க?
 Sr: நம்ம போன் செங்கல் மாதிரி!
  பில்டிங்கே கட்டலாம்
me: அப்போ பேஸ்மட்டம் வீக்கா?
  பில்டிங் வீக்கா?
Sr: டோட்டல் பாடியே வீக்கா கிடக்குது பன்றி காய்ச்சல் வேற எதாவது லொள்ளு பேசினீறு பக்கத்துல வந்து தும்மிருவேன்
  ஹாாாாாச்
me: ஐயோ... ஏனிந்த கொலைவெறி...
  வேனாம்யா வேணாம்
உன் தும்மல உன்ன்டோட வச்சுக்கங்க
 Sr: அப்ப என் அக்கவுண்டல 500ரூபாய் போட்டுவிடும் இல்லை மெயில்ல தும்மிருவேன் ஜாக்கிரதை!
me: இதென்ன புது வைரஸ்ஸா
  நாம வைரஸ் கூடவா சாட் பண்றேன்
  ஐயோ
Sr: ஆமா....! கொய்யால பிளாக்கர் எல்லாருக்கு பரப்ப போகிறேன் என்னை டாட்டாய்ஸ் கொசுவர்த்தி குட்நைட் எத யூஸ் பண்ணினாலும் ஒன்னும் பண்ணமுடியாது ஹஹஹஹ
me: ஹி..ஹி.. கொசு பேட் வச்சிருக்கேன்ல.... கரண்ட் ஷாக் அடிச்சு கொன்னே பூடுவேன்யா
Sr: மக்கா எங்க ஊர் கொசு காம்ளான் குடிக்கும் போல நான் வளர்கிறேனே மம்மி என்று கிடா சைஸ்க்கு இருக்கு இனி ஆட்டுக்கு பதிலா கொசுவ வெட்டலாம் போல
உம் கொசு பேட்டை மடக்கு மடக்குன்னு தின்னு பூடும்
me: ஆமாயா.... ஓவரா பேசுருவங்க இப்படி கண்ணு மண்ணு தெரியாம தான் பேசுவாங்க.... கிடா கொசு மடா கொசுன்னு
  ?
 Sr: யோவ் என்னயா தண்ணி கலக்காம சரக்கு அடிச்சிட்டீரா?
me: அண்ணே,நீங்க சாட்ல பேசுறத பாத்தா ஹாஸ்பிட்டல்ல பெட்ல இருந்து சாட் பன்றாப்ல தெரியுதே..... அப்போ இருந்து காய்ச்சல் மயமா பேசுறிங்க...
  சரக்கா? அப்படின்னா?
Sr: இல்லிங்க மாட்டாஸ்பத்திரிக்கு போயி எனக்கு ஒரு ஊசியும் என் நாய்குட்டிக்கு எங்க பேமிலி டாக்டர்கிட்ட ஒரு ஊசியும் போட்டுட்டு வந்து படுத்து கிடக்கிறேன்
me: அதானே பார்த்தேன்... சரக்குல தண்ணி கலக்காம அடிச்சுபுட்டு ஆளும், நாயும் மாறிப் போயி ஊசி போட்டு வந்துபுட்டு கவுந்து கேடக்கறேன்னு சொல்ல்ரிங்க...
  ஹா.. ஹா...
Sr: இல்லையா தண்ணி நிறைய குடிக்க சொன்னாரு டாக்டர்
me: ஓ... தண்ணியா... குடிங்க குடிங்க..
Sr: சரிங்க நான் தூங்க போகிறேன் குட்நைட்
 me: ஹி.. ஹி.. தண்ணி ஓவரா போச்சா?
  சரி குட் நைட்..
மேலும் வாசிக்க... "பன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்டிங். Full chat details."பதிவர்/நண்பர் செங்கோவி வருகை! ஹன்சிகா, பத்மினி ரசிகர்கள் கொண்டாட்டம்!

பதிவுலகிற்கு சில மாதங்கள் லீவ் விட்ட செங்கோவி மீண்டும் புதிய இன்னிங்க்ஸ் ஆட வந்துள்ளார். ஆரம்ப பதிவே தலைவி ஹன்சிகா நடித்த படத்தின் விமர்சனத்துடன் களம் இறங்கி உள்ளார். அவர் ஹன்சிகா பற்றி நிறைய பதிவுகளில் ஜொள்ளி எழுதியிருப்பார். அந்த பதிவுகளின் ஹன்சிகா பற்றிய சில வரிகளை தொகுப்பாக பதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு? (நானா யோசிச்சேன்) என்ற பதிவில் பதிவிட்டிருந்தேன். மாம்ஸ் செங்கோவியை வரவேற்கும் விதமாக அந்த பதிவை மீண்டும் மீள்பதிவாக பதிவிடுகிறேன்.
 நம்ம செங்கோவி பதிவரை தெரியாதவங்க இருந்தா நீங்க வேஸ்ட்டு. மன்மத லீலைகள் (என் கிழிந்த டயரியிலிருந்து...) அப்படின்னு ஒரு பேமஸ் தொடர் எழுதிட்டு வராரு. இந்த தொடரை படிச்சிங்கன்னா அடுத்த பார்ட் எப்போ வரும்னு நீங்க எதிர்பாக்க ஆரம்பிச்சுருவிங்க. இப்ப நான் அவர் எழுதற லீலையை பத்தி நான் சொல்ல வரல.... மனுஷன் கொஞ்ச நாளா ஒரு நடிகை மேல ரொம்ப பைத்தியமா இருக்கிறாரு. அந்த நடிகை யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், தெரியாதவங்க தெரிஞ்சுக்கங்க அந்த நடிகை பளபள ஹன்சிகா தான்...

ஹன்சிகாவுக்கு முன்னாடி நமீதா விசிறியா இருந்த இவரு, 
"எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நமீ படத்தைப் போடுவோம்........"
இப்படி எழுதிட்டு இருந்த செங்கோவி இப்ப நமீயை மறந்து ஹன்சியை பிடுச்சிகிட்டாரு.

    ஹன்சிகா வேலாயுதம் படத்துல விஜய் கூட ஜோடியா நடிக்கறாங்க. அத தெரிஞ்சுகிட்டு செங்கோவி பதறி போயிட்டாரு. ஆமா பின்ன, விஜய் படங்கள் வரிசையா ஊத்திக்கிறதுனால ஹன்சிகாவோட திறமை வெளியில தெரியாம, ராசியில்லா நடிகைகள் லிஸ்ட்டில் சேர்ந்திருவாங்களோனு பயந்து போயி ராத்திரி நேர பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டாரு. வேலாயுதம் வெற்றி பெற சாம பூசை செய்வோம்னு ஒரு பதிவே போட்டிருக்காருன்னா பார்த்துக்கங்க. பூஜை சக்சஸ் ஆனதா சொல்லியிருக்காரு. அவரு நம்பிக்கை வீண் போக கூடாதுன்னு நாமளும் வேண்டிக்கிருவோம். அப்புறம் பாவம்ல அவரு...
    தமனாவை டொச்சு பிகர்னு ஒரு பதிவுல சொல்லியிருக்காரு. அதுக்கு காரணம் ஹன்சிகா மேல அவருக்கு இருந்த ஈடுபாடு தான் காரணம். ஹன்சிகாவை பற்றி ஒரு பதிவில் எப்படி வர்ணிச்சிருகார்னு கீழே போட்டிருக்கேன்
ஹ..ஹ..ஹன்சிகா:
சென்ற வாரம் தமிழகத்தில் நடந்த உருப்படியான விஷயம், அழகுப்புயல் ஹன்சிகா மாப்பிள்ளையில் அறிமுகம் ஆனது தான். தமன்னா போன்ற டொச்சுப் பிகர்களை வேறுவழியின்றி ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, ஹன்சிகாவின் வருகை வரப்பிரசாதம். பதிவர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம். 

சில பேர் சின்ன குஷ்பூ என்கிறார்கள்(பிரபு ஜாக்கிரதை!), பூமிகா-மாளவிகா மிக்ஸிங் என்கிறார்கள், இன்னும் சிலர் கேப்டன் ரேஞ்சுக்கு ‘கனகாம்பரப்பூ- ஆரஞ்சுப்பழ சுளை-வெண்ணெயில் தடவி எடுக்கப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு-பருத்திப்பஞ்சு’ன்னு எழுதியும் மப்புல இருந்து மீளமுடியாம தவிக்காங்க. இன்னும் ஐந்து வருடங்களுக்காவது ஹன்சி நம்மளை விட்டுப் போகமாட்டாங்கன்னு நம்புறேன்! அதனால ஈரோட்டுல ஹன்சி மன்றத்துக்கும் அடிக்கல் நாட்டிட வேண்டியது தான்!

எப்படியெல்லாம் ஹன்சிகாவை வர்ணிச்சு எழுதியிருக்காருன்னு படிச்சு புல்லரிச்சு போச்சா உங்களுக்கு.

அப்புறமா இன்னொரு பதிவுல ஹன்சிகா பெயரை எப்படி நுழைக்கிறதுன்னு ரொம்ப யோசிச்சிருப்பாரு போல, எப்படி டுபாக்கூர் விட்டிருக்கார்னு கீழே பாருங்க,
பதிவர் வேண்டுகோள்:
தன்னோட ப்ளாக்ல நடிகைங்க படம் போடுற வழக்கம் இல்லாத ஒரு நல்ல பதிவர், எனக்கு மெயில் அனுப்பி இருந்தாரு. என்ன மேட்டர்னு பார்த்தா, அது இதுன்னு வளவளத்துட்டு ’நானா யோசிச்சேன்ல ஹன்சிகா படம் போடுங்க..ஹி..ஹி’-ன்னு மெயிலியிருக்காரு. என்ன அநியாயம் பாருங்க..சரி, மனுசன் ஆசைப்பட்டு கேட்டுட்டாரு.. அவருக்காக மீண்டும்:
    இன்னொரு பதிவுல ஹன்சிகா பொறந்த நாளு எப்பனு சொல்லியிருக்காரு, அதையும் பாருங்க.
1991 ஆகஸ்ட் 9ம் தேதி என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்?.. தெரியலையே..ம்.. எதுக்கு இப்போ இந்த கேவலமான ஹிஸ்ட்ரின்னு கேட்கீங்களா? அட, அன்னைக்குத் தாண்ணே நம்ம தங்கத்தலைவி, சக்கரவள்ளிக் கிழங்கு ‘ஹன்சிகா’ பொறந்த நாளு..அதான் அன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன்...மன்றக் கண்மணிகளும் இதே மாதிரி யோசிச்சுப் பாருங்கப்பா..
எங்கேயும் காதல் படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்காரு. அதுல நம்ம ஹன்சி தான் ஹீரோயின். ஹன்சியை எப்படி சொல்லியிருக்காருனு பாருங்களேன்.
"படம் மொக்கையானாலும் கொடுத்த காசு வீண் போகாம, நம்மைக் காப்பாத்துறது நமது தங்கத்தலைவி..ஃப்ரெஷ் பீஸ் ஹன்சிகா தான்"

அந்த பதிவில் ஒருத்தரு ஹன்சியை குறை சொல்லியிருப்பாரு. அதுக்கு செங்கோவி குடுத்த பதிலை பாருங்க.
செங்கோவி said... [Reply]

@! சிவகுமார் !//புண்ணியவதி ஹன்சிகா டப்பிங்குக்கு வாய் அசைச்ச அழகுக்கே நான் படம் போகாம இருந்துட்டேன்.!!// மகா மோசமான பின்னூட்டம்..தலைவியைவே தப்பாச் சொல்றீங்களா...உங்க கூட டூ நானு!
இன்னொரு பதிவில ஹன்சி மன்ற தலைவரா தான்னு ஒருத்தர் சொல்லியிருப்பாரு, அதுக்கு அவரோட பதிலை பாருங்க.
செங்கோவி said... [Reply]


@Heart Rider//அப்புறம் நம்ம செல்லத்தலைவி ஹன்சிகா மன்றத்துக்கு நாந்தான் தலைவர்..// இருக்குறது ஒரு தலைவி..அதுக்கு எல்லாரும் தலைவர் ஆகணும்னு நினைக்கலாமா?

நிறைய பேரு ஹன்சிகாவை கூகிளில் தேடினதுல ஒரு முறை கூகுளே படுத்திருச்சுன்னு ஒரு பதிவுல சொல்லியிருக்காரு கீழே பாருங்க.

ஹ..ஹ..ஹன்சிகா:
சமீபத்துல நம்ம ஹன்சிகா மன்றத்துக்குக் கிடைச்ச செய்தி நம்மளை ரொம்பவே கவலைப்பட வைக்குது. கூகுள்லயும் யூ டியூப்லயும் நிறையப்பேரு ‘ஹன்சிகா ஹாட்’னு தேடுனதுல கூகுள் படுத்திருச்சாம், யூடியூப் ‘ப’ டியூப் ஆகிடுச்சாம்..இப்படியாய்யா பண்ணுவீங்க..என்னய்யா அவசரம்..பாப்பா இப்ப தானே வந்திருக்கு..இனிமே தான் அவுட்டோர் சூட்டிங் போகணும். ஹோட்டல்ல தங்கணும்..குளிக்கணும். அப்புறம் தானே நீங்க எதிர்பார்க்குறது கிடைக்கும்..அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?
பாய்ஞ்சு பிறாண்டிட்டாங்களோ!
ஹன்சி எங்க போயிடப்போகுது..மெதுவாத் தேடுங்கய்யா..பலாப்பழத்துல ஈ மொச்ச மாதிரி மொத்தமாப் போய் விழுந்தா பாப்பா பயந்துடாது..நமீதா மாதிரியே எல்லாரையும் நினைச்சா எப்படி..அதனால மன்றக் கண்மணிகள் கட்டுப்பாடோட நடந்துக்கிட்டு, மன்றத்தோட மானத்தைக் காப்பாத்தணும்னு கேட்டுக்கிறேன்.

மாப்பிள்ளை படம் விமர்சனத்தில் தான் செங்கோவி ஹன்சியிடம் மயங்கி உள்ளார். அதற்கான காரணத்தை அவரே சொல்லியிருக்கார். கீழே பாருங்க.

நம்ம ’ஹன்சிகா மோத்வானி’( யாருப்பா அது விசில் அடிக்கிறது!). இவரை ஃப்ரெஷ் பீஸ்னு சொல்லலாம். தப்பில்லை. கொஞ்சம் பெரிய, ஆனால் குழந்தைத் தனமான முகம், நல்லா எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கக்கூடிய முக அமைப்பு, வெள்ளாவியில் வெளுத்த கலர், வெள்ளந்திச் சிரிப்பு என்று கலக்கலான அறிமுகம் ஹன்சிகா. தமிழனுக்குப் பிடித்த மாதிரி எல்லா அம்சங்களுடன் ஓரளவு ரவுண்டாக ஹன்சிகா இருப்பதால், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று நம்பலாம். பூமிகாவையும் மாளவிகாவையும் குஷ்பூவையும் தாப்ஸியையும் ஒன்றாக மிக்ஸ் செய்தது போல் இருக்கிறார் ஹன்சிகா. இதற்கு மேல் எப்படி ஜொள்ளுவது என்று தெரியவில்லை. நீங்களே ஃபோட்டோக்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஹன்சிகாவை வைத்து இவர் பதிவுகளில் வந்த தலைப்புகள்:    

 ரஜினி நாக்கில் சனி..ஹன்சிகா நமக்கு ஹனி! (நானா யோசிச்சேன்)

தில்லான தேர்தல் கமிசனும் ஜில்லான ஹன்சிகாவும் (நானா யோசிச்சேன்)


டிஸ்கி: ஹன்சிகாவின் தீவிர ரசிகரான செங்கோவி, அவருடைய பதிவுகளில் ஹன்சிகாவை பற்றி எப்படி எழுதியுள்ளார் என்ற பார்வையின் கீழ் இந்த பதிவை தொகுத்துள்ளேன். படங்கள் செங்கோவியின் தளத்திலிருந்து எடுத்துள்ளேன். அவ்வளவே...

இன்றைய  மற்றொரு பதிவு:
ஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும்!
மேலும் வாசிக்க... "பதிவர்/நண்பர் செங்கோவி வருகை! ஹன்சிகா, பத்மினி ரசிகர்கள் கொண்டாட்டம்!"

ஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும்!

செய்தி:
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, விதிமுறைகளை மீறி ராணுவ நிலம், அளவுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
நம்ம கமென்ட்: 
இதெல்லாம் ரொம்ப கம்மி. நம்ம ஊரு பெரும்புள்ளிகள் கிட்ட தகவல் அறியும் சட்டம் பாய்ந்தால் கையாடல் செய்த நிலத்தில் ஒரு குட்டி கண்டமே உருவாக்கலாம்.

செய்தி:
மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்காக, மகாராஷ்டிரா மாநில அரசு இதுவரை, 25 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
நம்ம கமென்ட்: 
மொத்ததுல அவனோட கூட்டத்துக்கே  இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த ரொம்ப குறைவாகவே பணம் செலவாயிருக்கும். இந்தளவு பணம் இருந்திருந்தா இன்னும் புதுசா டெக்னாலஜியோட தாக்கி இருப்பானுக?

செய்தி:
இதுவரையில் நாம் இளைய சமுதாயத்தினரை பார்த்து, "இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்' என கூறுவதை, பழமொழியாக கொண்டிருந்தோம். இனி, "இன்றைய அமைச்சர்கள் நாளைய சிறைக் கைதிகள்' என்ற சூழ்நிலை உருவாகும் என, கம்யுனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளர் பேச்சு.
நம்ம கமென்ட்: 
ஒரு வேளை ரொம்ப அனுபவமா இருக்குமோ? இன்றைய சிறைக் கைதிகளும் நாளைய அமைச்சர்கள்ன்னு சொன்னாலும் பொருந்துமே!

செய்தி:
சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக மீண்டும் அறிவிக்க வேண்டுமென பல கோடி தமிழர்கள் விரும்பியதால், அரசு மாற்றி அறிவித்தது' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நம்ம  கமென்ட்: 
அப்போ நம்ம ஐயா அந்த பல கோடி தமிழர்கள் லிஸ்ட்டில் இல்லையா? என்ன கொடுமை?

செய்தி:
"விஜயகாந்த் கோபப்படுகிறான் என்று கூறுகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவில்லை எனில், எனக்கு கோபம் வரும். மற்றவர்கள் நல்லதைச் செய்திருந்தால், நான் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டேன்" விஜயகாந்த் பேச்சு.
நம்ம கமென்ட்: 
நீங்க மட்டும் கோவப்படல. உங்க கட்சியில இருக்குற மிச்சம் சொச்சம் தொண்டர்களும் ரொம்ப கோவமா இருக்கறாங்க போல?

செய்தி:
மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது யார் என்பதில் ஆளுங்கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நம்ம கமென்ட்: 
வரலாறு ரொம்ப முக்கியம் அரசியல்வாதிகளே, இந்த மாதிரி அடிக்கடி மறந்துட்டு சண்டை போடாதிங்க!

செய்தி:
கர்நாடகாவில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தவறான தகவல். பீர் தயாரிப்பு மற்றும் சப்ளையில் எந்த பாதிப்பும் இல்லை' என, மாநில கலால் துறை அமைச்சர் கூறினார்.
நம்ம கமென்ட்: 
பீருல ஏதோ உள்நாட்டு குழப்பம் வந்திருக்கும் போல. கணக்கு பாக்ரவங்க பீர் அடிச்சு மப்பாகி கணக்கு வழக்கு குழம்பியிருக்கும்!
மேலும் வாசிக்க... "ஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும்!"

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1