CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



செங்கோவி! நடுநிசி 12 மணி! பதிவர்களின் கனா கானும் காலம்!!

அன்பான வலை நண்பர்களே....

டிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க முழுக்க பதிவர் செங்கோவியின் தளத்தில் நம்ம நண்பர்கள் அடித்த கும்மிகள் இன்று இல்லையே என ஏங்கும் நண்பர்களுக்காக எழுதப்பட்டது.

(செங்கோவி பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம பதிவுலக நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க. இந்த பதிவின் கடைசியில் இணைச்சிருக்கேன். அவங்க சொல்றதையும் மறக்காம படிச்சிடுங்க)
சென்ற வருடம் மதுரையில் எங்களின் சந்திப்பில் செங்கோவி
பதிவுலகில் இப்போ நிறைய புதுமுகங்களும், பிரபலங்களும், இருக்காங்க. ஆனா, ரெண்டு மூணு வருசமா நல்லா பீக்குல இருந்த பதிவர்கள் இப்போ எழுதறது கொறஞ்சு போச்சு. காரணங்கள் என்னாவாக இருந்தாலும் அப்போ, அதாவது 2011  வருட காலத்தை நெனச்சு பார்த்தா, அந்த கால பதிவுலக நாட்கள் திரும்ப வராதா என மனசு ரொம்ப ஏங்குது.

செங்கோவி எப்பவும் நைட் பண்ணெண்டு மணிக்கு கரெக்டா போஸ்ட் போட்ருவாரு.  செங்கோவி பதிவுகள் எப்பவும் செமையா இருக்கும். நானா யோசிச்சேன், மன்மதலீலை தொடர், அரசியல் பதிவுகள், சினிமா விமர்சனம் என ஒவ்வொரு நாளும் கலந்துகட்டி பதிவுகள் வரும். ஒவ்வொரு பதிவுக்கும் மொத கமெண்ட்ல ஆரம்பிச்சு கமெண்ட்ஸ் கவுண்டிங் நூறு, இருநூறுன்னு போயிட்டே இருக்கும்.

அவரு போஸ்டுல மொத கமென்ட் யாரு போடுவாங்கறதுல ஒரு போட்டியே நடக்கும். அனேகமா அப்ப தான் வடை, மொத வடைங்குற கமென்ட் பழக்கமே வந்துச்சுன்னு நினைக்கிறேன். அப்படியே மொத கமென்ட்ல கலாய்க்க ஆரம்பிச்சா, ஒவ்வொருத்தரா கூடி வர ஆரம்பிச்சிருவாங்க.

அதுவும், நானா யோசிச்சேன்ல, ஹன்சிகா, நமீதா, திரிஷா, பத்மினின்னு கலாய்ச்சு நாலஞ்சு வரிகள் இருந்தா போதும். பன்னிக்குட்டியார், தனிமரம் நேசன், நண்பர்கள் ராஜ், நிரூபன், மொக்கராசு மாமா, ரியல் சந்தானம் பேன்ஸ்(புட்டிபால்-Dr. Butti Paul), யோகா ஐயா, கோகுல் , காட்டான், மாத்தியோசி மணி என நண்பர்களின் கும்மி கமெண்ட்ஸ் ஸ்டாப் பண்ணவே முடியாது. 

எங்களுக்குள் கமெண்ட்ஸ்ல நக்கல்ஸ் போயிட்டே இருக்கும் போது, கூகிள் சாட்டில் வேற தனியா கிசுகிசுக்கள் போயிட்டு இருக்கும். அந்த கிசுகிசுக்கள் கமென்ட்ல போட்டு தனி ஆராய்ச்சியே நடக்கும். ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். நைட்டுல ஒரு நட்பு வட்டமே ஜாலியா இயங்கினது செங்கோவி பதிவுகள்ல தான்.  அவரும் வேலைகளில் பிஸி ஆக, அப்படியே சில சமயம் பதிவு எழுதுவதற்கு லீவ் விட ஆரம்பிச்சார். நட்பு வட்டங்களும் பதிவு எழுதறதுல கொறஞ்சு போயிட்டாங்க.

பதிவுகள் குறைய காரணம், நேரம் கெடைக்கறது இல்லை, இன்னொன்னு பேஸ்புக்ல ஸ்டேடஸ், லைக், கமெண்ட்ஸ் அப்படின்னு மாறிட்டதுனால அங்கேயே பிஸி ஆகிட்டாங்க. நாங்கெல்லாம் மீண்டு.. மீண்டும் பதிவு எழுத ஆரம்பிக்க செங்கோவி பதிவு எழுதினா தான் முடியும்னு நினைக்கிறேன். ஏன்னா, அங்க தானே நட்புகள் கூடும் இடமா இருந்துச்சு. பதிவுகள் எழுதவும் ஒரு ஆர்வமும் இருந்துச்சு. 

செங்கோவி, குவைத்தில் இருந்து ஒரு மாசம் லீவுக்கு அவர் ஊருக்கு வந்திருக்கார். போன் செய்தார்,  அக்கால நினைவுகளை பீலிங்கா பேசினோம்,  அதன் பாதிப்பே இந்த பதிவு.  

செங்கோவி பற்றி நான் எழுதிய பதிவுகள்:
கண்டேன் செங்கோவியை! ப்யூர் பதிவர் சந்திப்பு!
பதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு? (நானா யோசிச்சேன்)

அவரைப் பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க இதோ கீழே...

செங்கோவி............. என் இணைய உலகின் வழிகாட்டி. அப்பெல்லாம், பதிவுன்னா என்ன? கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம்! அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல? சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி?(இன்னி வரைக்கும் உங்க தளத்துல தமிழில டைப் பண்ணி,காப்பி பேஸ்ட் பண்ணித் தான் கமெண்டு போடுறேன். இது கூட)


பன்னிக்குட்டி ராம்சாமி
பொதுவா எல்லாருக்கும் அவங்கவங்க கல்லூரி காலங்கள் ரொம்ப இனிமையா இருந்திருக்கும், வாழ்க்கை பூரா அது மாதிரி வராதான்னு நெனச்சு ஏங்கிட்டு இருப்பாங்க, செங்கோவி ப்ளாக்ல இப்படித்தான் ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு. அந்த நாட்களை திரும்ப கொண்டுவரனும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். பார்க்கலாம் எந்தளவு சாத்தியப்படுதுன்னு....!


ரஹீம் கஸாலி
பதிவர் செங்கோவி பதிவு போட்டாருன்னா என்னைப்போல சில பல பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர் பதிவுக்கு கமெண்ட் போடுவதும், அதற்கு செங்கோவி பதில் கமெண்ட் கொடுப்பதுவுமாய் ஏக கலகலப்பாக செல்லும் அன்றைய பொழுது. அதிலும் நானா யோசிச்சேன் போட்டாருன்னா அதில் அவர் நக்கலும் நையாண்டியும் தூக்கலா இருக்கும். இயல்பானநடையில் எழுதும் அவர் இப்போது எழுதாமல் இருப்பது பதிவுலகிற்கு இழப்புதான். யோவ் சீக்கிரம் வந்து எழுதுய்யா. ஐ யம் வெயிட்டிங்க்.

தனிமரம் நேசன்
பதிவுலகம் என்ற எழுத்தாசைப் பயணத்தில் தனிமரமாக நுழைந்த போது பலரும் பலவிதத்தில் எனக்குத் துணை நின்றார்கள் அந்த வகையில் எப்படி பதிவு எழுதுவது எழுத்தும்பிழை தவிர்ப்பது பந்தி பிரிப்பது முதல் பலரோடு எப்படிப் பொதுத் தளத்தில் பழகவேண்டும் என்று எனக்கு பதிவுலக வழிகாட்டியாக அமைந்தவர், நான்  எப்போதும் மதிக்கும் ஒருவர் அது மன்மத லீலை என்ற தொடரில் எனக்கு அறிமுகமாகி முருகவேட்டையில் முண்டியடித்த நானாக யோசித்தேன் என்று எங்கள் பலருக்கு அறிமுகமான பதிவாளர் செங்கோவி ஐயாதான் ! இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா ? என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம்!, பதிவுகள் தாண்டி! குடும்பமாக! பலரோடு எனக்கு இன்றும் நட்புக்கிடைத்த அந்த நாட்கள் மறக்க முடியாது . 

அவர் தளத்தில் வரும் பன்னிக்குடியார், தமிழ்வாசி பிரகாஸ், யோகா ஐயா , மொக்கராசு மாமா,சந்தாணம் பாஸ், அப்பு அண்ணாச்சி என பலரோடு ஒன்றாகி இரவு நேர வேலையிலும் இரண்டு நிமிடங்கள் சரி இயல்பாக இடைவிடாது பேசி மகிழ்வது இவர்தளத்தில் தான் . அவர் பதிவு எப்ப வரும் என்று என் கைபேசியை நோண்டிக் கொண்டு இருக்கும் போது முதல்வடை போல முதல் பால்க்கோப்பி கேட்டு பலருடன் முண்டியடிப்பதிலும் அவை சுகமான நாட்கள் .பல��ுக்கும் பலரையும் பிடிக்கும் என்றாலும் பதிவுலக அரசியல், ஹிட்சு வெறி என சீண்டி தன்நிலை தாழ்ந்தாலும் இவரோ என் வழி தனிவழி இங்கு எந்தப் பின்னூட்டமும் ஏற்கப்படும் என்று திடம்கொண்டு 200000 தாண்டி ஹிட்சுகொடுத்தவர் செங்கோவி ஐயாவோடு அடிக்கடி கலாய்ப்பதும் கும்மியடிப்பதும் எப்போதும் சந்தோஸமே.

அவரோடு எனக்கு எப்படி இப்படி ஒரு நட்பு ஏற்பட்டது என்று நானே பல தடவை யோசிப்பேன் எங்களின் அலைவரிசை அதிகம் ஒன்று போல இருக்கும் . அவர் தான் என்னை முதன் முதலில் நேசரே என்று வாஞ்சனையுடன் பதிவுலகில் அழைக்கும் அன்பில் பெரியவர். அவர் மீண்டும் பதிவுலகம் வரவேண்டும் நீண்டகாலம் தனிப்பட்ட பணிகளினால் ஓய்வில் இருப்பதால் இனியும் பதிவுலகம் காக்க வைக்காமல் கமலாகாமேஸ் உடன் டூயட் பாட எங்களை எல்லாம் குதுகலமாக்க அவரின் தளத்தில் அதிகமான பதிவுகள் வரவேண்டும் என்பதே என் ஆசை! குஸ்பூ,சினேஹா ,பத்மினி என பதிவுகளுடன் இவர் தளத்தில் கும்மியடிக்க இன்னும் ஆசையுண்டு:)))
---- அன்புடன் தனிமரம்!


 Kss Rajh
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள்
நேரம் 2.20 நள்ளிரவு
மனம் படபடக்குது எப்ப கரண்ட் வரும் என்று பாலாய்போன கரண்ட் இந்த நேரமா போய்த்தொலையனும் சே என்று அழுத்துக் கொண்டே எப்ப வரும் எப்ப வரும் என்று மனம் தந்தி அடித்தது. அந்த நடுச்சாமத்தில் ஏன் கரண்டுக்காக மனம் பதை பதைக்கனும் கரண்டு வந்தால் தானே கம்பியூட்டரை ஆன் பண்ண முடியும் கம்பியூட்டரை ஆன் பண்ணினால் தானே செங்கோவி அண்ணன் தளத்திற்கு போக முடியும், அங்க போனால் தானே சந்தோசமாக கமெண்ட்டில் கும்மி அடிக்கமுடியும். ஆம் பதிவுலகில் நள்ளிரவிலும் கடையில் கூட்டமாக இருப்பது செங்கோவி அண்ணன் தளத்தில் தான். அஞ்சலி,கமலா காமேஸ், ஹன்சிகா இவர்களின் அன்பர்கள், ரசிகர்கள் கூட்டம் எப்போது செங்கோவி அண்ணன் தளத்தில் நிரம்பி வழியும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு காலம் மீண்டும் கிடைக்காதா தூக்கம் தொலைத்து மனம் கும்மியடித்த அந்த பொழுதுகள் என்று மனசு ஏங்குகின்றது...............


கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
மேலும் வாசிக்க... "செங்கோவி! நடுநிசி 12 மணி! பதிவர்களின் கனா கானும் காலம்!!"



பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்!


வணக்கம் வலை நண்பர்களே!
இன்று பேஸ்புக்  மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டரில் என அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லேப்டாப், கம்ப்யூட்டரில் பேஸ்புக் ஸ்டேடஸ் தமிழில் டைப் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் கூகிள் தரும் கூகிள் தமிழ் இன்புட் (google tamil input) என்ற சாப்ட்வேர் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.

எவ்வாறு இன்ஸ்டால் செய்வது?

முதலில் இந்த பக்கத்தை ஓபன் செய்து அதில் தமிழ் என்பதை செலக்ட் செய்து, I agree என்ற கட்டத்தையும் செலக்ட் செய்ய வேண்டும்.
பின்னர் download என்பதை க்ளிக் செய்தால் கம்ப்யூட்டரில் ஒரு file download ஆகும்.

Download செய்த file-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

இன்ஸ்டால் செய்த பின்  task bar - இல் right clik செய்து முதலாக உள்ள toolbars-ஐ க்ளிக் செய்து அங்கே காட்டும் language bar-இல் க்ளிக் செய்யவும். 


க்ளிக் செய்தால் computer Task bar-இல் வலது பக்கம் நேரம், தேதி காட்டும் இடத்திற்கு அருகில் EN என்ற ஐக்கான் இருக்கும். இந்த ஐகான் இருந்தால் google tamil input கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகிவிட்டது என அறியலாம்.
EN என்பதை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில், EN English (United states), TA Tamil (India) எனவும் இருக்கும். அதில் டிக் மார்க் EN - இல் இருப்பதால் டைப் செய்தால் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் வரும். எனவே தமிழ் மொழி வர வேண்டும் என்பதால் நாம் TA என்பதை டிக் மார்க் செய்ய வேண்டும். 

டிக் மார்க் செய்தால் taskbar மேலே கீழேபடத்தில் உள்ளது போல ஒரு bar தோன்றும்.

பின்னர் டைப் செய்ய வேண்டிய இடத்தில், தமிழ் மொழி வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கு ஏற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்ய வேண்டும். உதாரணமாக, "வணக்கம்" என தமிழில் டைப் செய்ய வேண்டுமெனில், "vanakkam" என டைப் செய்து spacebar button-ஐ ஒரு அழுத்து அழுத்தினால் தமிழில் வணக்கம் என தோன்றும். 

மேலும் ஆங்கிலத்தில் டைப் செய்யும் பொது அந்த உச்சரிப்பு ஒலிக்கு தொடர்புடைய மற்ற தமிழ் வார்த்தைகளும் அடுத்தடுத்து காட்டும். இங்கே கீழே படத்தில் பாருங்களேன், "காட்டும்" என்பதற்கு kaattum என டைப் செய்யாமல் katum என தவறாக டைப் செய்ததால் கட்டும் என்று முதலில் காட்டுகிறது. ஆனால் மூன்றாவதாக "காட்டும்" என இருப்பதால் நான் மவுஸ் மூலம் மூன்றாவதை தேர்வு செய்தேன்.

இவ்வாறு நாம் தேவையான தமிழ் வாக்கியத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு தமிழ் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்வதன் மூலம் தமிழ் வார்த்தைகளை பெறலாம்.

சரி, இந்த google tamil input மூலம் பேஸ்புக்கில் எப்படி டைப் செய்வது என கேட்கறீர்களா?
ரொம்ப ஈசி///
பேஸ்புக் ஸ்டேடஸ் கட்டத்தில் கர்சரை வைத்து TN என்பதை செலக்ட் செய்து தமிழ் வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துக்களை டைப் செய்தால் தமிழில் வாக்கியங்கள் கிடைக்கும். அவ்வளவு தான். 

சிலர் google translate மூலம் டைப் செய்து காப்பி செய்து பேஸ்புக்கில் பேஸ்ட் செய்வதாக தெரிகிறது. இம்முறையை பயன்படுத்தினால் காப்பி/பேஸ்ட் அவசியமில்லை. வேகமாக சாட் செய்யலாம்.
Google tamil input மொத்தம் 22மொழிகளுக்கு சப்போர்ட் செய்கிறது.
மேலும் விளக்கங்கள் அறிய கீழே உள்ள படத்தில் வாசியுங்கள்.

குறிப்பு:
1. மிக முக்கியமாக இதன் மூலம் இணைய தொட���்பு இல்லாத சமயத்திலும் தமிழில் எழுதலாம். 

2. MS OFFICE, NOTEPAD, BLOG, EMAIL, TWITTER என எதில் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தலாம்.

3. Control பட்டனையும் G பட்டனையும் (Ctrl+G) அழுத்தினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் எளிதாக மாற்றி எழுதலாம்,

மேலும் வாசிக்க... "பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்!"



பேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா? தவிர்ப்பது எப்படி?


வணக்கம் வலை நண்பர்களே!

பேஸ்புக்கில் சிலரது பக்கத்தில் Facebook profile viewers tag என மற்ற பேஸ்புக் நண்பர்களால் tag செய்யப்படுவதாகவும், அவ்வாறு tag செய்யப்பட்டதை க்ளிக் செய்தால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் அதே மாதிரியான Facebook profile viewers tag செய்யப்படுகிறது. இதனால் புற்றீசல் போல நிறைய பேஸ்புக் பயனாளிகளுக்கு இந்த Facebook profile viewers tag பரவுகிறது.

இவ்வாறு Facebook profile viewers tag செய்தாலும் நம்மால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க ஒரு வழி உள்ளது. மேலும் வாசிக்க...
மேலும் வாசிக்க... "பேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா? தவிர்ப்பது எப்படி?"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-17

வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் கடந்த பாகத்தில் ப்ளாக் டாஸ்போர்ட்-இல் உள்ள LAYOUT-இல் சிலவற்றைப் பற்றி பார்த்தோம். இனி மற்ற பகுதிகளை பார்ப்போம்.

Blog posts:
இந்த பகுதியில் பதிவு சம்பந்தமான settings அமைக்கலாம். 
மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-17"

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1