ஒரு உண்மைச் சம்பவமே இக்கட்டுரை எழுத காரணம்.
கடந்த வருடம் என் தூரத்து உறவினர் ஒருவர் திடீரென பிரபல மருத்துவமனையில் ஐஸியூ-வில் அட்மிட் செய்யப்பட்டார். அவரது நெருங்கிய உறவினர்களால் அந்த மருத்துவமனையே நிறைந்து இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சொன்ன செய்தி எங்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது.
வயிறு மற்றும் கல்லீரல் பகுதிகள் அதிக புண்ணாகி வீக்கமாக இருக்கிறது எனவும், அவர் தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் இந்த உடல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் சொன்னார்கள். அவர் இனியும் தொடர்ந்து மதுவிற்கு அடிமையாக இருந்தால் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும் என டாக்டர்கள் சொன்னார்கள்.
என் உறவினருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள். இனியாவது அவர்களின் எதிர்காலம் என்னாகும் என அவர் எண்ணிப் பார்த்து வாழ்க்கை வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி குடும்பத்திற்காக வாழாமல் பாழாப்போன மதுவிற்காக அடிமையானதால் அவருக்கு மட்டுமில்லாமல் அவரை சேர்ந்த, சார்ந்த எல்லோருக்குமே பிரச்சனை ஆகிறார்.
வயிறு மற்றும் கல்லீரல் பகுதிகள் அதிக புண்ணாகி வீக்கமாக இருக்கிறது எனவும், அவர் தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் இந்த உடல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் சொன்னார்கள். அவர் இனியும் தொடர்ந்து மதுவிற்கு அடிமையாக இருந்தால் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும் என டாக்டர்கள் சொன்னார்கள்.
என் உறவினருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள். இனியாவது அவர்களின் எதிர்காலம் என்னாகும் என அவர் எண்ணிப் பார்த்து வாழ்க்கை வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி குடும்பத்திற்காக வாழாமல் பாழாப்போன மதுவிற்காக அடிமையானதால் அவருக்கு மட்டுமில்லாமல் அவரை சேர்ந்த, சார்ந்த எல்லோருக்குமே பிரச்சனை ஆகிறார்.
குடும்பத்தை சீரழிக்கும் மதுவை யாராலும் ஒழிக்க முடியாது. ஏனெனில் அரசாங்கமே தனி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறது. அதிலும் கொள்ளை லாபம் அடித்து மக்களுக்காக நலத்திட்டங்கள் செய்கிறோம் என தம்பட்டம் வேறு. மதுவினால் சம்பாதித்த பணத்தில் மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்து மது அருந்தியவரின் குடும்பத்திற்கு கெடுதலை மறைமுகமாக (மது அருந்துபவர் திருந்த மாட்டார் என்பது வேறு விஷயம்) ஊக்குவிக்கிறது. நமக்கு நாமே திருந்த வேண்டும். குடும்பம் செழித்து வளர நாம் தான் திருந்த வேண்டும். நம் பிள்ளைகளும் நம்மைப் பார்த்து மதுவிற்கு அடிமையாகி விடக்கூடாது. அப்படி ஒரு செயல் நடந்தால் வருங்கால சந்ததியும் நாசமாய் போய்விடும் என்பதை மது அடிமைகள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இன்றைய காலத்தில் கட்டாயமாக உணர்ந்து தான் ஆக வேண்டும்.
அடுத்ததாக சிகரெட்... இந்த புஸ்.. புஸ்... புகை நமக்கும், அருகிலிருப்பவர்களுக்கும் பகை என்பதையே மறந்து விதவிதமாக புகை விடுகிறார்கள், இந்த புகை பிரியர்கள். விதவிதமாக புகைத்தால் ஏதோ அவார்டு கிடைத்த மாதிரி நினைப்பு அவர்களுக்கு. சிகரெட் பிடிப்பவர்கள் கடைசி கொசுறு வரை விட மாட்டார்கள். காசுக்கு தான் வாங்கி சிகரெட் பிடிப்பார்கள். ஆனாலும் ஏதோ ஓசியாய் கிடைத்த மாதிரி பஞ்சு, விரல், உதடு சுடும் வரை புகைத்துக் கொண்டே இருப்பார்கள்.
காலை எழுந்ததும் ஒரு சிகரெட். அப்புறம் டீத்தண்ணி குடித்த பின் ஒரு சிகரெட், அப்புறம் கக்கூசில் ஒரு சிகரெட், அப்புறம் காலை உணவு, நண்பர்கள் கூட்டத்தில், ஓய்வு நேரங்களில் என ஆரம்பித்து நைட் படுக்கையிலும் சிகரெட் புகைத்து காலை முதல் இரவு வரை தன் அருகிலிருக்கும் அனைவருக்கும் மறைமுகமாக புகை பாதிப்பை உருவாக்குகிறார்கள். புகை பிடிப்பவர்களை விட, அருகிலிருப்பவ்ர்களுக்கு தான் புகை பாதிப்பு அதிகம் என ஒரு புள்ளிவிவரம் நெடுங்காலமாக சொல்கிறது. ஆனாலும் இந்த புள்ளிவிவரத்தால் யாரும் திருந்தியவர்கள் இல்லை.
புகைப்பிடிப்பவர்கள் புகைக்கும் நேரத்திலாவது தனிமை இடத்தை பயன்படுத்தலாம், ஆனால் கூட்டமாக இருக்கும் இடத்தில் தான் புகைப்பார்கள். பஸ்சில் ஏறும் வரை சிகரெட் பிடிப்பார்கள் சிலர், அதிலும் பஸ் கிளம்பிய பின்னர் கடைசியாக ரெண்டு பப் இழுப்பார்கள் பாருங்கள், அந்த நேரத்தில் அந்த இரண்டு பப் அவருக்கு அவசியமாக ஆகிறது போல. பஸ் ஏறும் போது தடுமாறும் நிலை ஏற்பட்டால் அந்த இரண்டு பப் காப்பாற்றுமா?கண்டிப்பாக காப்பாற்றாது. அவரது சிகரெட் புகையால் அருகில் நிற்பவரும் தள்ளி சென்றிருக்கலாம்.
இன்றைய நவநாகரீக உலகில் சில பெண்களும் புகை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். சில தமிழ் சினிமாக்களில் பெண்கள் புகை பிடிக்கும் காட்சி உள்ளது. அவர்களை தவறு என தட்டிக் கேட்டால் "ஆணுக்கு பெண் சமம்" வாதம் செய்யவும் தயங்க மாட்டார்கள். சிகரெட்டின் கெடுதல் பெண்களின் கர்ப்பபை வரை பாதிப்பை உண்டாக்கும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
புகைக்கும் பழக்கத்தின் பாதிப்பை உணர்ந்து அவர்களாக திருந்தினால் மட்டுமே புகை பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியும்.
அடுத்ததாக கஞ்சா, புகையிலை, போதை மருந்து வஸ்துகள்....
மது, சிகரெட் இந்த இரண்டையும் கஞ்சா மக்களிடையே நன்கு ஊடுருவி விட்டது. கூலி வேலை பார்ப்பவர்கள் முதல் சேரில் அமர்ந்து வேலை பார்க்கும் முதலாளிகள் வரை கஞ்சா மற்றும் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். பெட்டிக்கடை என்னும் பங்க் கடைகளில் சரம் சரமாக பாக்கெட்டுகளில் பல்வே��ு பெயர்களில் கஞ்சா, புகையிலை வஸ்துகள் விற்கப்படுகிறது.
கையில் கொட்டி விரல்களால் நசுக்கி, கசடுகளை கீழே கொட்டிவிட்டு, சிறு உருண்டையாக உருட்டி கடைவாய் பற்கள் பகுதியிலோ, முன் உதடுக்கு உள்ளேயோ வைத்து போதையில் மிதக்க வேலை செய்கிறார்கள். வேலையின் கடினம், அலுப்பு, தூக்கம் என எல்லாவற்றையும் இந்த வஸ்துகள் களைந்து அவர்களை சுறுசுறுப்பாக்கி விடுகிறது என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உடல் நரம்பின் சுறுசுறுப்பு படிப்படியாக குறைந்து விடும் என்பதை மறந்து விடுகிறார்கள். பற்கள் காரை படிந்து படிப்படியாக வாய், தொண்டை, உணவுக்குழாய் வரை பாதிப்படைந்து புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பாக உள்ளது.
இன்று பொது இடங்களை மது, சிகரெட்களை விட இந்த போதை வஸ்துகள் பெரும் சீர்கேட்டை உண்டாக்குகிறது. அதாவது இந்த பழக்கம் உள்ளவர்கள் எச்சிலை புளுச்.... புளுச் என, இடங்களை பார்க்காமல் மூலை முடுக்கு என எல்லா இடங்களிலும் துப்பி அசிங்கப்படுத்தி சுகாதார சீர்கேட்டை உண்டாக்குகிறார்கள். சாப்பாடை விட இந்த போதைகளையே இவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
இந்த போதையால் நமக்கான அழிவை நாமே விரும்பி ஏற்றுக் கொள்கிறோம். இந்த போதையால் வளரும் இளைய தலைமுறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வருங்காலம் ஒளி வீசாமல் இவர்களின் வாழ்க்கையை மங்கவே செய்கிறது. ஆகையால் நமது உடல் சீர்கெட்டு, நம்மைச் சார்ந்தவர்கள், நம்மை இழக்கும் முன் போதையில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும்.
23 கருத்துரைகள்:
மது, சிகரெட், கஞ்சாலாம் புகைக்குற மாதிரி நடிக்காத சினிமா ஹீரோ யாரு சொல்லுங்க!? நடிகர்களை நம்பி அரசாளும் உரிமையை கொடுக்கும் நம்மாளுங்க அவங்களாஇ போல புகைப்பது, குடிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லையே, சினிமாவும், அரசியல் கட்சிகளும்தான் இவற்றை மக்கள் மத்தியில் புழங்க வைக்குறாங்க.
முன்னலாம் வில்லன்கள் அறிமுகத்தின்போதுதான் த்ண்ணி அடிக்குற மாதிரியும், புகைக்குற மாதிரியும் காட்டுவாங்க, அதாவது தண்ணி அடிச்சு, சிகரெட் பிடிச்சு, சீட்டு ஆடுற, காபரே பார்க்கும் ஆள் கெட்டவன்னு மகள் மனசுல ஒழுக்கம் இருந்த காலம்.
ஆனா, இப்ப ஹீரோ அறிமுகமே பார்ல, சிகரெட் பிடிக்குற மாதிரி, கேபரே பார்க்குற மாதிரி இல்லாட்டி பொண்ணை சைட்டடிக்குற மாதிரிதான் நடக்குது. தன் ஆதர்ஷ நாயகன் அப்படி செய்யுறதை பார்த்த ரசிகனும் அதையே செய்யுறான்.
அந்த பிரியங்கா போட்டோ சூப்பர்.. சமூகப் பதிவு??
@ராஜி
பழக்கத்தை குடும்பத்துக்காக விட்டுத் தள்ளுங்கன்னு சொல்லியிருக்கேன் அக்கா..
@கோவை ஆவி
அந்த பிரியங்கா போட்டோ சூப்பர்.. சமூகப் பதிவு?? ////
ஏன்யா ஆவி.. பிரியங்கா போட்டோ மட்டும்தான் கண்ணுல பட்டுச்சா?
நீங்க எழுதினதைப் பாத்து நாலு பேர் திருந்தினாக்கூட பதிவு சக்சஸ்
செத்தாலும் பரவாயில்லை எனும் நபர்களை என்ன செய்வது...? அவரவர் உணர்ந்து திருந்த வேண்டும்...
தங்கள் பதிவு , இன்றைய சமுதாய சீர் கேட்டை படம் பிடித்து காட்டுகிறது! இது திருந்து மென்ற நம்பிக்கை எனக்கில்லை!
பயனுள்ள அருமையான விரிவான
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 6
நல்ல விழிப்புணர்வு பதிவு! இப்போதெல்லாம் சிறுவர்கள் கூட மதுவுக்கும் சிகரெட்டுக்கும் அடிமை ஆவதை பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது!
விழிப்புணர்வுப் பதிவு...
இன்றைய சினிமாக்களில் தண்ணியடிக்கிறது மட்டுமே காட்சியாக்கப்படுகிறது...
சமீபத்தில் ஒரு படத்தில் 6,7 வயதுப் பையன் என்ன பாண்டிச்சேரி சரக்கா என்று கேட்பதாக வைத்திருக்கிறார்கள்...
சினிமா இப்போது சீரழிக்கிறது...
அருமையான கட்டுரை நண்பரே...
வாழுகின்ற போதே
சாவினைத் தேடிக்கொள்ளும்
தகாத பழக்கங்களை பற்றிய சீர்மிகு பதிவு...
கூட்டங்களில் இந்த பழக்கங்களை கையாள்வைதை
தவிர்த்தாலே நலம்..
போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை சட்டங்கள் போட்டு தடுக்க முடியாத நிலையில் தீமைகளை உணர்ந்து அவர்களாகவேதான் திருந்தவேண்டும
அரசாங்கம் மனது வைத்தால் இந்த சமூக சீர்கேடுகளை களைய முடியும் ...ஆனால் மந்திரிமார்களின் வரும்படி குறைந்து போகுமே ...மேலும் ,இப்படி மக்களை இப்படி போதைக்கு அடிமை ஆக்கிவிட்டால் அரசாள்வது சுலபமாகி விடுகிறது !
த.ம்8
அதைத்தான் முகேஷ் தவறாம சொல்லிக்கிட்டு இருக்காப்புல.. பிரியங்கா தான் புதுசா இருந்துச்சு.. ஹிஹிஹி..
எல்லாருக்குமே கண் கெட்டதுக்கப்புறம் சூரிய நமஸ்காரத்தோட அருமையே தெரியுது.... நாப்பது வருசமா சிகரெட்ட புடிக்கறதே ஒரு ஸ்டைல்னு காட்டுன ரஜினி இப்போ நுரையீரலையே மாத்திட்டு வந்ததுக்கப்புறம் யாரு சிகரெட் புடிக்காதீங்கன்னு சொல்றார்.
ஆனா ஒன்னுங்க.... இதை எதையுமே செய்யாம வாழ்றதுல என்னங்க த்ரில் இருக்குன்னு கேக்கறவுங்களும் இருக்கத்தான் செய்றாங்க.
எனக்கு நல்லா தெரிஞ்ச என்னுடைய வங்கி நண்பர்கள் ஏறக்குறைய முப்பது வருசமா குடிச்சி, சிகரெட் புடிச்சி, மாமிசம் சாப்ட்டு இப்போ எண்பது வயசுலயும் உடல் சுகத்தோட இருக்காங்களே அதுக்கு என்ன சொல்றீங்க?
எல்லாமே அளவோட இருந்தா எந்த ஆபத்தும் இல்லை. எது நம்ம அளவுங்கறத தெரிஞ்சிக்கிட்டா எதுவுமே ஆபத்தில்லை.
ம்..இந்தப் பதிவை எப்படி மிஸ் செஞ்சேன்? ஃபேஸ்புக் ஒழிக!
மதுவின் தீமைகள் பற்றி ஆணித்தரமாகச் சொல்லி இருக்கிறீர்கள் தமிழ்வாசி. டாஸ்மாக்கில் விற்கும் மது, மொலாசஸ் எனும் மோசமான மூலப்பொருளால் தயாரிக்கப்படுகிறது. அதுவே இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம்.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்
வலைச்சர தள இணைப்பு : வியாழனின் விழுதுகள்
வலைச்சரம் மூலமாக தங்கள் தளத்தில் இணைந்தேன். அருமை. வாழ்த்துக்கள்.
எனது தளமும் உங்கள் பார்வைக்கு http://nellaibaskar.blogspot.com/
வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
பதிவு சரி மக்கள் புகை பழக்கம்,மது, வலியும் வேதனையும் வரும் போது புரியும் உணருபூர்வமாக உணரனும் மதுவினால் உடலில் படும் மாற்றங்கள் விளக்கமாக சொல்லிருக்கலாம் நன்றி