வணக்கம் வலை நண்பர்களே,
தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது வலைச்சரம் (www.blogintamil.com) என்னும் தளத்தில் ஆசிரியராக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். தாங்கள் விரும்பி வாசிக்கும் தளத்தில் பிடித்த பதிவுகள் பற்றி, வலைப்பூவை பற்றி சில வரிகள் தொகுத்து வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரை தினம் ஒரு பதிவாக பதிவிட வேண்டும்.
வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக தங்களுக்கு அழைப்பு வந்து, தாங்களும் ஏற்றுக் கொண்ட பின், வலைச்சரத்தில் இணைவது எப்படி? பதிவு எழுதுவது எப்படி? என சில சந்தேகங்களுக்கான விடை தான் இந்த பதிவு...
வலைச்சரத்தில் பதிவு எழுத தங்களை இணைப்பது எப்படி?
தங்களின் அனுமதி வலைச்சர குழுவிற்கு கிடைத்த உடன், உங்களுக்கு வலைச்சரத்தில் இருந்து ஒரு மெயில் அனுப்பப்படும். அந்த மெயில் கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல இருக்கும்.
அந்த மெயிலில் Accept Invitation என்பதை க்ளிக் செய்தால்... கீழே படத்தில் உள்ளவாறு ஒரு பக்கம் திறக்கும்.
பின்னர் click here to sign in என்பதை கிளிக் செய்து பிளாக்கர் கணக்கில் நுழைந்த உடன் Accept invitation என்பதை க்ளிக் செய்தால் உங்கள் பிளாக்கர் டேஷ்போர்டில் வலைச்சரம் இணைந்து இருக்கும்.
மேலே படத்தில் உள்ளவாறு எனது தமிழ்வாசி பிளாக்குடன் டேஷ்போர்டில் வலைச்சரமும் இணைந்துள்ளது. அதே போல உங்களது டேஷ்போர்டில் இருக்கும்.
பதிவில் லிங்க் இணைப்பது எப்படி?
பின்னர் New post எழுதும் பக்கத்தை திறந்து தகுந்த தலைப்பிட்டு பதிவுகள் எழுத வேண்டும். பதிவில் பலரது வலைப்பூக்களையும் அறிமுகம் செய்ய வேண்டி இருப்பதால், அந்த வலைப்பூ பதிவுகளின் லிங்க் எவ்வாறு தர வேண்டும் என்ற சந்தேகம் எழும். நம் பதிவில் மற்ற வலைப்பூவின் பதிவு லிங்க் இணைக்க அந்த வலைப்பூவின் URL முகவரியை COPY செய்து கொள்ள வேண்டும்.
1. கீழே உள்ள படத்தில் "வலைச்சரத்தில்" என்ற வலைப்பூவை லிங்க் தருவதற்கு தேர்ந்தெடுத்து உள்ளேன். பார்க்க படம்:
2. வார்த்தையை தேர்ந்தெடுத்த பின் பதிவு எழுதும் இடத்திற்கு மேலே வரிசையாக நிறைய ICONS இருக்கும். அதில் Link என்பதை தேர்வு செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஒரு கட்டம் திறக்கும்.
3. திறந்த கட்டத்தில் text to display என்ற இடத்தில் நாம் தேர்வு செய்த வார்த்தை இருக்கும். அதற்கு கீழே link to என்பதில் web address தேர்வு செய்து, அதற்கு பக்கத்தில் உள்ள கட்டத்தில் நாம் Copy செய்த வலைப்பூ பதிவின் URL-ஐ PASTE செய்ய வேண்டும். பார்க்க மேலேயுள்ள படம்.
4. பின் open this link in a new window என்ற கட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நாம் கொடுத்த லிங்க் வேறு பக்கத்தில் திறக்கும்.
பதிவில் லேபிள் இணைப்பது எப்படி?
வலைச்சரத்தில் நீங்கள் பதிவு எழுதும் போது தவறாமல் லேபிள் தர வேண்டும். அதில் நீங்கள் வலைப்பூவில் பயன்படுத்தும் பெயரை குறிப்பிட வேண்டும். பார்க்க படம் கீழே.
உங்கள் பெயரை கொடுத்த பின் Done என்பதை க்ளிக் செய்தால் உங்களது வலைச்சர பதிவில் லேபிள் இணைந்து விடும்.
மேலும் லேபிள் பற்றி விரிவாக அறிய இங்கு க்ளிக் செய்யவும்.
நண்பர்களே, இந்த பதிவில் வலைச்சர ஆசிரியர்களாக வரும் பெரும்பாலான பதிவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களான, லிங்க் தருவது பற்றியும் லேபிள் தருவது பற்றியும் பார்த்தோம்.
பதிவில் படங்களை எவ்வாறு இணைக்க வேண்டும் என சந்தேகம் இருப்பின், பதிவில் படங்களை இணைப்பது என்ற லிங்க்கை க்ளிக் செய்து பதிவை வாசிக்கவும்.
மேலும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கவும்.
18 கருத்துரைகள்:
ஆசிரியர்களுக்கு இருக்கும் சந்தேகம் தீர்ந்து விடும்.... விளக்கங்களுக்கு நன்றி...
இனி வரவிருக்கும் வலைச்சரம் பொறுப்பாசிரியர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். தமிழ்வாசி பிரகாஷுக்கு நன்றி!
எனக்கு இதுல கொஞ்சம் டவுட்ஸ் இருந்துச்சு. ஆனா பாருங்க, என்னை அறியாமலே சரியா தான் பண்ணியிருக்கேன். இந்த போஸ்ட் பாத்து தான், எப்படி லிங்க் new windowல ஓபன் பண்றதுன்னு தெரிஞ்சிகிட்டேன்.
அவ்வ்வ்வ் கோடானுகோடி நன்றிகள்
மிக அருமையான ஆலோசனைகள்! வலைச்சரத்தில் எழுதுவது வலைப்பதிவர்களின் கனவு! கனவு மெய்ப்பட சிறப்பான ஆலோசனைகள் தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
ஆசிரியர்களுக்கே பாடம் எடுக்குறீரா?
நல்லதொரு பதிவு.
தீர்ந்தது ஐயப்பாடு! இனி வலைச்சரத்தில் நுழைந்தால் தூள் கிளப்பி விடுவேன். எப்போ சான்ஸ் பிரகாஷு? ஹி... ஹி...! (மிக மிகப் பயனுள்ள பகிர்வு தம்பீ!)
வலைச்சர ஆசிரியர்களாக வர இருப்பவர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.
வாழ்த்துக்கள்.
மிகவும் பயனுள்ள தகவல் குறிப்புகள்....
நான் ஆசிரியரா இருந்தப்ப இப்படி ஒரு பதிவு போடாத தமிழ்வாசி பிரகாஷை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்... ச்சீ, கண்டிக்கிறேன்...
வணக்கம்
அண்ணா
விளக்கிய விதம் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புதியதாய் ஆசிரியர் பொறுப்பேற்கும் நண்பர்களுக்கு நிச்சயம் பயன்படும்.....
என்னை மாதிரி கற்றுக் குட்டிகளுக்கு நல்ல விளக்கம் !
த.ம 5
நல்ல தகவல்கதை .. அருமை .வாழ்த்துக்கள்..
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com
வலைச்சரத்தில் பதிவு எழுத தங்களை இணைப்பது எப்படி?
பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் பிரகாஷ்.
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட இதோ முகவரி http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-6.html?showComment=1391823306644#c5321598056634440767
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான விளக்கங்களுடன் பதிவு.இன்னும் ஒரு முறை படித்து புரிந்து கொள்கிறேன்,..நன்றி மா.
உபயோகமான பதிவு