CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும்.... என் பார்வையில்... பகுதி மூன்று

இன்னைக்கு மதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும் பதிவுல மதுரையை சுத்தி உள்ள விசயங்களைப் பத்தி பாக்க போறோம்.

நம்பிக்கை தந்த வைகை:

மேலும் வாசிக்க... "மதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும்.... என் பார்வையில்... பகுதி மூன்று"



YOUTUBE வீடியோவை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து மென்பொருட்கள் - Youtube Downloader Free

       
ன்றைய இணைய உலகில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கானக்கான வீடியோ படங்கள் இணையத்தில் YOUTUBE வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டு மக்களால் பார்வையிடப்பட்டு வருகிறது. அறிய திரைப்படங்கள் முதல் வேடிக்கையான நிகழ்ச்சிகள் என YOUTUBE-இல் இல்லாத வீடியோ படங்களே இல்லை என சொல்லலாம். YOUTUBE-இல் உள்ள வீடியோ படங்களை இணையத்திலேயே பார்க்கும் போது ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். 


              திரும்பவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும் போது அந்த வீடியோ படத்தை டவுன்லோட் செய்து வைக்க வேண்டியது வரும். அவ்வாறு டவுன்லோட் செய்யாமல் இணைய வழியாக பார்க்கும் போது, அதாவது எத்தனை முறை பார்த்தாலும் நமது இணைய இணைப்பின் கொள்ளளவு தேவையில்லாமல் வீணாகும். இதனால் விரைவிலேயே தீர்ந்து போகும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகையால் YOUTUBE வீடியோ படங்களை ஒருமுறை பார்த்தாலும், அல்லது டவுன்லோட் செய்தாலும் ஒரே அளவு இணைய அளவே செலவாகும். ஆகையால் YOUTUBE வீடியோ படங்களை டவுன்லோட் செய்ய பல வழிகள் (YOUTUBE DOWNLOADERS) உள்ளது. அவற்றில் சிறந்த பத்து மென்பொருட்களை இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் வாசிக்க... "YOUTUBE வீடியோவை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து மென்பொருட்கள் - Youtube Downloader Free"



போன், பேன் தொல்லையா? சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்...

வணக்கம்  நண்பர்களே..
டிஸ்கி: தமிழ்வாசி தளத்தில் முன்னொரு காலத்தில் சின்ன பாப்பா.. பெரிய பாப்பா என்ற தலைப்பில் இரு நண்பிகளின் அரட்டை கச்சேரி உரையாடல் பதிவாக வந்தது.. சில காலம் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் இரு பாப்பாக்களின் அசத்தல் அரட்டை கச்சேரி களை கட்டுகிறது...

(பெரிய பாப்பா வீட்டுக்கு சின்ன பாப்பா வருகிறாள்)
"அடியே சின்ன பாப்பா.... என்னடி ரொம்ப நாளா ஆளவே காணோமே.. எங்கடி போயிருந்த...?"

மேலும் வாசிக்க... "போன், பேன் தொல்லையா? சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்..."



மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நடந்தது, அனைவருக்கும் நன்றி!!!

வணக்கம் தமிழ் வலைப்பதிவர் நண்பர்களே,
நேற்று (26/10/2014) மதுரையில், மூன்றாவது தமிழ் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.


மேலும் வாசிக்க... "மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நடந்தது, அனைவருக்கும் நன்றி!!!"



மதுரை வலைபதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு

வணக்கம்
தமிழ் வலைபதிவு நண்பர்களே,
தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது...
PLAY button press செய்யவும்...
நேரலை:


Live streaming video by Ustream
மேலும் வாசிக்க... "மதுரை வலைபதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு"



மதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!!!


வணக்கம் தமிழ் வலைப்பதிவர்களே,

நாளை மதுரையில் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


1. அரங்க மேடையானது நடனம் பயிற்றுவிக்கும் மேடை. அதோடு மேடைக்கு பின்புறம் சுவாமி சன்னதி இருப்பதால் மேடையில் ஏறுபவர்கள் காலணிகள் அணித்து ஏற வேண்டாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கீழேயே கழற்றி வைத்து விடவும்.

2. நாம் சந்திக்க விரும்பும் பதிவர்களின் பெயரை மறக்காமல் இருக்க ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் இணையத்தில் முகம் பாரா நண்பர்களாக இருப்பவர்களை மறக்காமல் சந்தித்து நட்புறவை வளர்க்க முடியும்.

3. விழா அரங்கில் நமக்கு அறிமுகமில்லாத பதிவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் நாமாக சென்று நம்மைப் பற்றி அறிமுகம் செய்வதோடு மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் பின்னாளில் அவர்களின் வலைப்பூவை வாசிக்கவும், அவர்களிடத்தில் நட்புறவை ஏற்படுத்தவும் உதவியாய் இருக்கும்.

4. நம்மைப் பற்றி, வலைப்பூவைப் பற்றி பிறரிடத்தில் அறிமுகம் செய்கையில் அவர்கள் நம்மை முழுமையாக அறியும் வண்ணம், தெளிவாக குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக: நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது வலைப்பூ தலைப்பாக "திடங்கொண்டு போராடு" என்றும், வலைப்பூ முகவரியாக "சீனுகுரு" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார்.

இவ்வாறு பல பெயரில் இருந்தால் பெயரில் குழப்பமாக இருக்கலாம். இதனால் நாம் நம்மைப் பற்றி கூடுதல் தகவல்களை குறிப்பிட்டால் மற்றவர்கள் அறிய எளிதாக இருக்கும்.


5. முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும்.

6. பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.

7. மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். அதே சமயம் முடிந்தவரை அமைதி காக்கவும் தவறக் கூடாது.

8. புதிய பதிவர்களை வரவேற்று, விழா அரங்கில் அவர்களுக்கு தேவையான வசதிகளையும், உதவிகளையும் செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு பதிவுலக புரிதலும், பதிவர்களின் நட்பும் கிடைக்கப் பெறும்.


நன்றி நண்பர்களே.....


தொடர்புடைய பதிவுகள்:

மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்!!!

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு

வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!! 

மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்! 

மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!! 

வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 

மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!
 
நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!
மேலும் வாசிக்க... "மதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!!!"



மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்!!!

வணக்கம் உலக வலைப்பதிவர் நண்பர்களே...

மதுரையில்  நடைபெற இருக்கும் மூன்றாவது வலைப்பதிவர் திருவிழாவிற்கு வருகை தரும் பதிவர்களுக்கு பேருந்து வழித்தடம் பற்றிய தகவல்கள் வரும் பத்திகளில் பகிரப்படுகிறது.

பதிவர்கள்  இன்னமும் தங்கள் வருகையை உறுதி செய்யாமல் இருந்தால் விரைவில் இங்குள்ள இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் வருகையை உறுதி செய்யுங்கள்.

பதிவர்  சந்திப்பு நடைபெறும் கீதா நடனகோபால நாயகி மந்திர் அரங்கத்தின் பேருந்து நிறுத்தம் காமராஜர் சாலை தியாகராஜர் கல்லூரி முன்புறம் உள்ளது.
அரங்கத்திற்கு வரும் வழி மற்றும் பேருந்து நிறுத்தம்


பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: 4,  15,  32,  96, 97,  99. 

இரயில் மூலம் வருபவர்களுக்கு:
மதுரை இரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவு வாயில் வழியாக வெளியேறி வலது பக்கம் ஐந்து நிமிட நடக்கும் தூரத்தில்  பெரியார் பேருந்து நிலையம் உள்ளது. 
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வருபவர்கள் பெரியார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தட பேருந்தில் வர வேண்டும். 

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: C3, 16w
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி

 விரகனூர் சுற்றுச் சாலையில்(ring road) இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: 4,  15,  32,  96, 97,  99.
விரகனூர்  சுற்றுச்சாலையிலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி
எந்த பகுதியில் இருந்து அரங்கம் இருக்கும் தெப்பக்குளத்திற்கு வந்தாலும் பேருந்து நிறுத்தம் தியாராஜர் கல்லூரி முன்பாக மட்டுமே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
 ****************************************
பதிவர்கள்  தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
பகவான்ஜி: 8903694875
மனசாலி: 9150023966

பெண்  பதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
திண்டுக்கல் தனபாலன்: 9043930051
பால கணேஷ்: 9003036166


தொடர்புடைய பதிவுகள்:
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு

வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!! 

மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்! 

மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!! 

வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 

மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!
 
நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!
மேலும் வாசிக்க... "மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்!!!"



நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!


வணக்கம் வலைப்பதிவு தோழமைகளே,
நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா இன்னும் ஆறே நாட்களில் (அக்டோபர் 26, ஞாயிறு) தமிழ்ச் சங்கம் தோன்றிய மதுரை மாநகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில், கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது...

திருவிழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பதை ஏற்கனவே ஒரு முன்னோட்ட பதிவில் பகிர்ந்திருந்தோம்.
இந்த  பதிவில் முழுமையான நிகழ்ச்சிநிரல் பகிரப்பட்டு உள்ளது.
மேலும் வாசிக்க... "நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!"



மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!

வணக்கம் உலக தமிழ் வலைப்பதிவர்களே!!

வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி மதுரையில் மூன்றாவது வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடைபெற இருக்கும் நிகழ்வுகளின் முன்னோட்டம் பற்றி இப்பதிவில் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் சிறப்பு விருந்தினராக இருவர் பங்கேற்க இருப்பதாக அறிவித்து இருந்தோம். அவர்கள் யாரென கீழ்வரும் பத்திகளில் பார்ப்போம்.
மேலும் வாசிக்க... "மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!"



வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014

வணக்கம் உலக தமிழ் வலைப்பதிவர்களே!!!!

       வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் வலைப்பதிவர் திருவிழா மதுரையில் நடக்கவிருப்பது தாங்கள் அறிந்ததே. இவ்விழாவை இனிதே சிறப்பிக்க தங்கள் வருகையை உறுதி செய்த பதிவர்களின் முதல் பட்டியல் கடந்த பதிவில் வெளியிட்டு இருந்தோம். இன்றைய தேதியில் வருகையை உறுதி செய்த பதிவர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டாவது பட்டியல் இப்பதிவில் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் வாசிக்க... "வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014"



மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!!



வணக்கம் வலைப்பதிவர் நண்பர்களே,

டந்த இரண்டு ஆண்டுகள் சென்னையில் பதிவர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது தாங்கள் அறிவீர்கள். அதே போல இவ்வருடம் மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக திட்டமிட்டும், மிக விரைவாகவும் நடைபெற்று வருகிறது. 

இவ்விழாவின் நிகழ்ச்சி நிரல் வரும் நாட்களில் உங்களின் பார்வைக்கு வைக்க இருக்கிறோம். அதற்கு முன்னோட்டமாக என்னென்ன நிகழ்ச்சிகள் பதிவர் விழாவில் இருக்கும் என இப்பதிவில் பார்ப்போம்.

மேலும் வாசிக்க... "மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!!"



மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்!

வணக்கம் உலக தமிழ் வலைப்பதிவர்களே!!!!

       வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் வலைப்பதிவர் திருவிழா மதுரையில் நடக்கவிருப்பது தாங்கள் அறிந்ததே. இவ்விழாவில் கலந்து கொள்ள தங்களின் வருகையை உறுதி செய்துள்ள பதிவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் வாசிக்க... "மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்!"



வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!!

அன்பார்ந்த உலக தமிழ் வலைப்பதிவர் நண்பர்களே.... வணக்கம்...

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பதிவர் சந்திப்பு உங்களின் பேராதரவோடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையில் வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இது பற்றிய முதல் பதிவை இங்கு காணலாம். ஆகையால்,

மேலும் வாசிக்க... "வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!!"



வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு

தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....

மேலும் வாசிக்க... "வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு"



பேஸ்புக்கில் நண்பர்களின் Game Request-ஐ Block செய்வது எப்படி?


வணக்கம் வலை நண்பர்களே,

பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் அக்கௌன்ட் வைத்திருக்கும் பலருக்கும் தொல்லையாக இருப்பது நண்பர்கள் விடுக்கும் Game request. 

Game request-ஐ தொல்லையாக கருதுவதற்கு காரணம்:
தேவையில்லாமல் notification வரும்.
Games விளையாட நேரம் இருக்காது. 
Games விளையாட பிடிக்காது. 
இணைய இணைப்பு வேகம் மெதுவாக இருக்கும்.
என தொல்லைக்கான காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்வாறு நம்மை தொல்லைப்படுத்தும் Game request-ஐ முழுமையாக தவிர்க்க, தடுக்க இயலுமா எனில் ஓரளவு தடுத்து விடலாம்.

Game request-ஐ எப்படி தடுப்பது (BLOCK) எனப் பார்ப்போமா?

மேலும் வாசிக்க... "பேஸ்புக்கில் நண்பர்களின் Game Request-ஐ Block செய்வது எப்படி?"



ஏண்டா என்னைய பார்த்து இப்படி கேள்வி கேட்ட??? அய்யோ அம்மா!!!

      ம்ம ஏஞ்சல் அக்கா இருக்காகல... அவுக பத்து கேள்விய கேட்டுப்புட்டு, அதுக்கு பதிலும் சொல்லனும்னு மெரட்டிட்டு போயிருக்காக. அவுக பதிலை படிச்சா ரொம்ப பயமா இருக்குது. ஆமால்ல, அம்புட்டு இன்வால்மென்ட்டா எழுதியிருக்காக... சரி... சரி.. அவுகல பத்தி சொன்னது போதும்.. நீ கேள்விக்கு பதில் சொல்றியா? இல்லையான்னு? நீங்க ஆர்வத்துல? கேட்கறது என்னோட காதுல அறையுது.... ம்ஹும்... ரொம்ப வலிக்குது... இதோ சொல்லிப்புடுறேனுங்க....

மேலும் வாசிக்க... "ஏண்டா என்னைய பார்த்து இப்படி கேள்வி கேட்ட??? அய்யோ அம்மா!!!"



சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா?

வணக்கம் வலை மக்களே....
"சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..." இந்த வரி ரஜினிகாந்த் நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் வரும் பாடல். அதற்கேற்ப 1980-களில் திரைப்படங்களில் முடி சூடா மன்னனாக திகழ்ந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் தேடி வந்தது. 
மேலும் வாசிக்க... "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா?"



கம்ப்யூட்டரில் ஸ்கிரீன்ஷாட் படம் எடுக்க எளிதான மென்பொருள் PICPICK!!!


வணக்கம் வலை நண்பர்களே,

நம்மில் பலரும் தங்கள் அலுவலக வேலைகளுக்காகவும், இணையதள பதிவுகளுக்காகவும், புகைப்படமாக மாற்றவும் இன்னும் பல தேவைகளுக்காக கம்ப்யூட்டரில் இணைய தளங்களில் உள்ள செய்திகள், படங்கள் போன்றவற்றை ஸ்கிரீன்ஷாட் எடுக்க அவசியம் ஏற்படுகிறது.

ஸ்கிரீன்ஷாட் எடுக்க பலருக்கும் தெரிந்த ஒரே வழி PRINT SCREEN கொடுத்து PAINT software மூலமா edit செஞ்சு பயன்படுத்துவிங்க. ஆனால் screenshot எடுக்க பல softwares இருக்கு. மேலும் browser extensions, addon உள்ளது. ஆனால் நான் கடந்த சில வருடங்களா ஒரு எளிமையான, இலவச software பயன்படுத்தறேன். அதைப் பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

மேலும் வாசிக்க... "கம்ப்யூட்டரில் ஸ்கிரீன்ஷாட் படம் எடுக்க எளிதான மென்பொருள் PICPICK!!!"



ஆபத்தான நிலையில் மதுரை நிலத்தடி நீர்!!!

வணக்கம் வலை நண்பர்களே....
இன்று செய்தித்தாள்களை வாசித்துக் கொண்டிருக்கையில் மதுரை நிலத்தடி நீர்மட்டம் பற்றி செய்தி கண்ணில் பட்டது.
மேலும் வாசிக்க... "ஆபத்தான நிலையில் மதுரை நிலத்தடி நீர்!!!"



மதுரையில் பதிவர்கள் சந்திப்பு விரைவில்...,BLOGGERS MEET at MADURAI - 2014

வணக்கம் வலை நண்பர்களே,

கடந்த சில வருடங்களாக நாம் அனைவரும் ஒன்றுகூடி சந்தித்த "பதிவர்கள் சந்திப்பு" என்ற இனிமையான தருணம், இந்த வருடம்(2014) நம் தூங்கா நகரமான மதுரையில் நடக்க இருக்கிறது. 

மேலும் வாசிக்க... "மதுரையில் பதிவர்கள் சந்திப்பு விரைவில்...,BLOGGERS MEET at MADURAI - 2014"



வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - மதுரை அழகர் திருவிழா 2014 - வீடியோ இணைப்பு

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று (14/05/2014) காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. வைபத்தைக் காண அதிகாலை முதலே பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருந்தனர். வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. இருந்த போதும், லட்சக் கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இரவு நேரத்திலேயே குவிந்து அழகரை தரிசிக்கக் காத்திருந்தனர்.

மேலும் வாசிக்க... "வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - மதுரை அழகர் திருவிழா 2014 - வீடியோ இணைப்பு"



மதுரை கள்ளழகர் எதிர்சேவை 2014 - படங்கள், சிறப்புப்பார்வை

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஓன்று, மதுரை சித்திரை திருவிழா. சைவமும் வைணவமும் இணைந்து நடத்தும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இதில் முதலில் வருவது மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழா.

இந்த விழா நிறைவு பெற்றதும் அழகர் கோவில் விழா தொடங்குகிறது. இந்த ஆண்டும் மீனாட்சி அம்மனின் பட்டாபிசேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவை விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது.










இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகராக மாறி நேற்றுக் காலை கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

மேலும் வாசிக்க... "மதுரை கள்ளழகர் எதிர்சேவை 2014 - படங்கள், சிறப்புப்பார்வை"



மதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் 2014 - சிறப்புப்பார்வை


       துரையில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (10-05-2014)  காலை காலை 10:30 முதல் 10:54 மணிக்குள் மீனாட்சியம்மன் சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மீனாட்சி கழுத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி
திருக்கல்யாணத்தை காண அதிகாலை முதலே மேற்கு, வடக்கு ஆடி வீதிகளில் குவிந்தார்கள். மக்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் ஆடி வீதி முழுதும் பந்தல் அமைத்து குளிர்சாதன வசதியும் செய்திருந்தார்கள். 

மேலும் வாசிக்க... "மதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் 2014 - சிறப்புப்பார்வை"



மதுரை சித்திரை திருவிழா (2014), கள்ளழகர் திருவிழா ஆரம்பம்

      உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா இன்று மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து கள்ளழகர் கோயிலில் மே 10ம் தேதி திருவிழா நிகழ்ச்சி தொடங்குகிறது.


மேலும் வாசிக்க... "மதுரை சித்திரை திருவிழா (2014), கள்ளழகர் திருவிழா ஆரம்பம் "



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-12

முந்தைய பாகங்களுக்கு...

வணக்கம் வலை நண்பர்களே,

டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும்.  நன்றி  

இந்தப் பதிவின் இறுதியில் விளக்க வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும். அதில் கீழ்க்கண்ட படத்திற்கான program எளிதாக புரியும்படி simulator மூலம் விளக்கப்பட்டுள்ளது. 


மேற்கண்ட படத்திற்கு absolute method-இல் ப்ரோக்ராம் எவ்வாறு எழுதுவது என பார்ப்போமா?

முதலில் கீழ்க்கண்ட வரிகளை ஒருமுறை படித்துப் பார்த்து அந்த வரிகளை மனதில் எப்போதுமே இருத்திக் கொள்ளுங்கள்.

1. G00 G90 G17 G21 G40 G80 G49; 
ஒரு PROGRAM ஆரம்பிக்கும் போது இந்த CODES முதல் வரியாக கொடுத்தால் நல்லது.
மேற்கண்ட CODES மிக முக்கியமானது. ஏனெனில் ஒரு PROGRAM ஆரம்பிக்கும் போது சில தேவையில்லாத CODES செயல்பாட்டில் இருக்கக்கூடாது. அதனால் இந்த G17- XY PLANE, G90- ABSOLUTE METHOD, G21- METRIC INPUT, G40- CUTTER RADIUS COMPENSATION CANCEL, G80 CANNED CYCLE CANCEL, G49- TOOL LENGTH OFFSET CANCEL ஆகிய இந்த CODESகளை தவறாமல் கொடுக்க வேண்டும்.

2. G91 G28 Z0. என்ற வரியை இரண்டாவதாக கொடுக்க வேண்டும்.

இந்த வரியில் G28- AUTOMATIC ZERO RETURN கொடுக்கப்பட்டு Z AXISஐ HOME POSITIONக்கு கொண்டு செல்ல வேண்டும்.

3. M06 T1; முதல் TOOL ஐ CALL செய்ய வேண்டும். முதல் TOOL ஆக நாம் செட் செய்து வைத்திருப்பதை T1 இல் CLAMP செய்து வைத்திருக்க வேண்டும்.


4. G0 G90 G54 X Y; இந்த வரியில் X,Y முதல் புள்ளியை கொடுக்க வேண்டும்.


5. M03 S3000; அடுத்து இந்த வரியை கொடுக்க வேண்டும். தேவையான SPINDLE SPEED மற்றும் SPINDLE ROTATION DIRECTION கொடுக்க வேண்டும்.


6. G43 Z100. H1; என்று கொடுக்க வேண்டும்.


7. G00 Z5. M08; என்று கொடுக்க வேண்டும். இங்கே COOLANT ON செய்ய வேண்டும் (தேவையெனில்).


8. G01 Z-1. F100; என கொடுக்க வேண்டும். தேவையான FEED RATE தர வேண்டும்.


மேற்கண்ட எட்டு வரிகளில் உள்ளவை PROGRAM-க்கு மேலே வர வே��்டும்.

9. படத்தின் அளவுகளுக்கான புள்ளிகளை கொடுக்க வேண்டும். (PROGRAM POINTS) 

கீழே உள்ள 10 - 14 வரிகள் PROGRAM-க்கு கீழே அடுத்தடுத்து வர வேண்டும்.

10. G01 Z5. M09; என்பது வர வேண்டும். COOLANT OFF செய்ய வேண்டும்.

11. G00 Z100. M5; என்பது வர வேண்டும். SPINDLE STOP செய்ய வேண்டும்.


12. G00 G91 G28 Z0; Z AXIS HOME POSITION கொண்டு செல்ல வேண்டும்.


13. G00 G91 G28 Y0; Y AXIS HOME POSITION கொண்டு செல்ல வேண்டும்.


14. M30; ஆகியவை வரிசையாக வர வேண்டும்.



PROGRAM எழுதுவதற்கு முன் ORIGIN எங்கே வைக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த படத்தில் நடுவில் ORIGIN உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே நமது PROGRAM அந்த ORIGIN புள்ளியை வைத்தே எழுதுவோம்.

N1 G00 G90 G17 G21 G40 G80 G49;
N2 G91 G28 Z0.;
N3 M06 T1;
N4 G0 G90 G54 X-10. Y-30.;
N5 M03 S1000;
N6 G43 Z100. H1;
N7 G00 Z5. M08;
N8 G01 Z-1. F100.;
N9 G01 X10. Y-30. F200.;
N10 X10. Y-10.;
N11 X30. Y-10.;
N12 X30. Y10.;
N13 X10. Y10.;
N14 X10. Y30.;
N15 X-10. Y30.;
N16 X-10. Y10.;
N17 X-30. Y10.;
N18 X-30. Y-10.;
N19 X-10. Y-10.;
N20 X-10. Y-30.;
N21 G01 Z5. M09;
N22 G00 Z100. M5;
N23 G00 G91 G28 Z0.;
N24 G00 G91 G28 Y0.;
N25 M30;

ABSOLUTE முறையில் PROGRAM எழுதிவிட்டோம். இதற்கான SIMULATION-ஐ ஒரு வீடியோ மூலம் பார்கலாமா?





அடுத்த பதிவில் incremental method-இல் program அமைப்பது பற்றி பார்ப்போம்.
மேலும் வாசிக்க... " மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-12"



மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் (madurai city news) - பகுதி இரண்டு!

வணக்கம் வலை நண்பர்களே,

மதுரையும் மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் மதுரை பற்றிய செய்திகளை பார்த்து வருகிறோம். இனி இந்த பதிவில் என்னென்ன?

கள்ளழகருக்கு வைகை கிடைக்குமா?
கள்ளழகர் இறங்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க... "மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் (madurai city news) - பகுதி இரண்டு!"



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) - refresh post

வணக்கம் வலை நண்பர்களே,
டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும்.  நன்றி    

நமது தமிழ்வாசியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மெக்கானிகல் மாணவர்களுக்காக, மெக்கானிக்கல் பிரிவில் ஒரு பகுதியான CNC பற்றி தொடர் எழுதி வந்தேன். பல காரணங்களால் அந்த தொடரை தொடர இயலாமல் போனது. இனி அந்த தொடரை தொடரலாம் என முடிவெடுத்துள்ளேன்.  அதன் தொடர்ச்சியாக இதுவரை வெளிவந்த தொடர்கள் ஒரு பார்வையாய் இங்கே தொகுத்துள்ளேன். இதுவரை அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) - refresh post"



மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுகாதார கேடு - அதிகாரிகள் கவனிப்பார்களா?

வணக்கம் வலை நண்பர்களே,

மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு சிறுநீர் கழிப்பிடத்தால் ஏற்படும் சுகாதார சீர்கேடு பற்றி இப்பதிவின் மூலம் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் வாசிக்க... "மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுகாதார கேடு - அதிகாரிகள் கவனிப்பார்களா?"



வலைதளத்தில் பொங்கல் வாழ்த்து அட்டையை இணைப்பது எப்படி?


வணக்கம் வலை நண்பர்களே,
நாளை தைத்திருநாளாம், உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை. உற்றார், உறவினர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் உங்கள் வலைப்பூ மூலமும், உங்கள் தளத்தை வாசிக்க வருபவர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல ஆசையா? அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, கீழே சொல்லப்பட்டிருக்கும் மிக எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்.

மேலும் வாசிக்க... "வலைதளத்தில் பொங்கல் வாழ்த்து அட்டையை இணைப்பது எப்படி?"



எல்லா வளமும் ,நலமும் பெற இனிதே தொடங்கட்டும்....


வணக்கம் நண்பர்களே,
எல்லா வளங்களும் பெற்று நலமாக வாழ இந்த புத்தாண்டில் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.....
மேலும் வாசிக்க... "எல்லா வளமும் ,நலமும் பெற இனிதே தொடங்கட்டும்...."

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1