தமிழகத்தின் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஓன்று, மதுரை சித்திரை திருவிழா. சைவமும் வைணவமும் இணைந்து நடத்தும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இதில் முதலில் வருவது மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழா.
இந்த விழா நிறைவு பெற்றதும் அழகர் கோவில் விழா தொடங்குகிறது. இந்த ஆண்டும் மீனாட்சி அம்மனின் பட்டாபிசேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவை விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகராக மாறி நேற்றுக் காலை கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.