உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா இன்று மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து கள்ளழகர் கோயிலில் மே 10ம் தேதி திருவிழா நிகழ்ச்சி தொடங்குகிறது.
இன்றிலிருந்து ஆரம்பிக்கும் திருவிழா மே 12 -ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இன்று முதல் ஒவ்வொரு நாளும் என்னென்ன வைபவங்கள் நடக்க இருகின்றன என்பதை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
01-05-2014 வியாழக்கிழமை:
கொடியேற்றம் (காலை 10.36 முதல் 11.00 மணிக்குள்)
02-05-2014 வெள்ளிக்கிழமை (இரவு):
02-05-2014 வெள்ளிக்கிழமை (இரவு):
அம்மன் சுவாமி பூத - அன்ன வாகனங்களில் திருவீதி உலா
03-05-2014 சனிக்கிழமை (இரவு):
03-05-2014 சனிக்கிழமை (இரவு):
அம்மன் சுவாமி கைலாச பர்வதம் - காமதேனு வாகனங்களில் திருவீதி உலா
04-05-2014 ஞாயிற்றுக்கிழமை (இரவு):
04-05-2014 ஞாயிற்றுக்கிழமை (இரவு):
அம்மன் சுவாமி தங்கப்பல்லக்கு வாகனங்களில் திருவீதி உலா
05-05-2014 திங்கட்கிழமை (இரவு):
05-05-2014 திங்கட்கிழமை (இரவு):
அம்மன் சுவாமி தங்கக் குதிரை வாகனங்களில் திருவீதி உலா
06-05-2014 செவ்வாய்க்கிழமை (இரவு):
06-05-2014 செவ்வாய்க்கிழமை (இரவு):
அம்மன் சுவாமி ரிஷப வாகனங்களில் திருவீதி உலா
07-05-2014 புதன்கிழமை (இரவு):
07-05-2014 புதன்கிழமை (இரவு):
அம்மன் சுவாமி நந்திகேசுவரர் - யாளி வாகனங்களில் திருவீதி உலா
08-05-2014 வியாழக்கிழமை (இரவு 7:04 மணி - 7:30 மணிக்குள்):
08-05-2014 வியாழக்கிழமை (இரவு 7:04 மணி - 7:30 மணிக்குள்):
அருள்மிகு மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம்
09-05-2014 வெள்ளிக்கிழமை:
09-05-2014 வெள்ளிக்கிழமை:
அருள்மிகு மீனாட்சியம்மன் திக்கு விஜயம்
10-05-2014 சனிக்கிழமை (காலை 10:30 முதல் 10:54):
10-05-2014 சனிக்கிழமை (காலை 10:30 முதல் 10:54):
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருகல்யாணம்
11-05-2014 ஞாயிற்றுக்கிழமை:
11-05-2014 ஞாயிற்றுக்கிழமை:
திருத்தேரோட்டம் (காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல்)12-05-2014 திங்கட்கிழமை:
தீர்த்தவாரி
தீர்த்தவாரி
இதைத்தொடர்ந்து கள்ளழகர் கோயிலில் மே 10ம் தேதி திருவிழா நிகழ்ச்சி தொடங்குகிறது. 11ம் தேதி கோயிலில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
12ம் தேதி அழகர்கோயிலிலிருந்து மாலை 5.30 மணியளவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் முன்பிருந்து மதுரைக்கு புறப்படுகிறார்.
வழிநெடுக மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகருக்கு 13ம் தேதி அதிகாலை மூன்றுமாவடி, புதூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ எதிர்சேவை நடைபெறுகிறது. அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் விடிய விடிய திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 14ம் தேதி சித்ரா பவுர்ணமி நிறைநாளில் காலை 6 மணியளவில் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்குகிறார். பின் அங்கிருந்து புறப்பட்டு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு சென்று அன்றிரவு தங்குகிறார்.
15ம் தேதி தங்கக்கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வைகையாற்றில் மண்டூக முனிவருக்கு சாப விமோ சனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடியவிடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறும்.
16ம் தேதி இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
17ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கருப்பண சுவாமி கோயில் முன்பிருந்து கள்ளழகர் பிரியாவிடை பெற்று பல்லக்கில் அழகர்மலைக்கு செல்கிறார்.
18ம் தேதி கள்ளழகர், அழகர்கோயிலுக்கு சென்று இருப்பிடம் சென்றடைவார். நன்றி: தினகரன்
நண்பர்கள் அனைவரையும் மதுரை சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டு மீனாட்சியம்மன், கள்ளழகர் அருள் பெற அழைக்கின்றேன்.
9 கருத்துரைகள்:
தகவல்களுக்கு நன்றி பிரகாஷ்.
நண்பர்கள் அனைவரையும் மதுரை சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டு மீனாட்சியம்மன், கள்ளழகர் அருள் பெற அழைக்கின்றேன்.
கண்டிப்பா இப்படியொரு கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு அம்பாளின் அருள் பெற்றிட
எமக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன சகோதரா ஒரு சின்ன விஷயம் அழைப்பிதழோடு கூடவே இந்தியாவுக்கு ஒரு ரிக்கெற் எடுத்து அனுப்பினால் போதும் பறந்தோடி வந்துடுவோமில்ல :))))மிக்க மகிழ்ச்சி சகோதரா எங்களுக்கும் சேர்த்து வணங்குகள் அம்பாளின் அருள்க் கடாட்சம் அனைவருக்கும் கிட்டட்டும் .பகிர்வுக்கு மிக்க நன்றி .
தகவல்களுக்கு நன்றி!
பகிர்வுக்கு நன்றி! அழகரின் வைகை காட்சியையும் பகிருங்கள்§ வரமுடியாத தூரத்தில் பலர்!
அன்பின் பிரகாஷ் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - விரிவான விளக்கமான பதிவு - நன்று நன்று - மதுரையிலும் மழை பெய்து விழாவினைத் துவக்கியதோ ? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்புடையீர்,
வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/7.html
தங்களின் வலைத்தளம் இன்று ஆசிரியர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/
அருமையான புகைப்படங்களுடன்
விளக்கங்கள்
நல்வாழ்த்துகள்
தெளிவான விளக்கங்களுடன் படமும் அழகு. வலைச்சர அறி முகத்துக்கு வாழ்த்துகள்