மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று (14/05/2014) காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. வைபத்தைக் காண அதிகாலை முதலே பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருந்தனர். ��ைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. இருந்த போதும், லட்சக் கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இரவு நேரத்திலேயே குவிந்து அழகரை தரிசிக்கக் காத்திருந்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் பச்சை பட்டு உடுத்தி, ஆண்டாள் சூடிய பரிவட்ட மாலையை அணிந்து புறப்பட்ட கள்ளழகர் பக்தர்கள் படை சூழ காலை 6.10 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷமிட்டனர்.
அப்போது கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் அழகர் மீது துருத்தி நீர் தெளித்து மகிழ்ந்தனர். சுமார் 10 லட்சம் பக்தர்கள் வைகை ஆற்றிலும், அதன் கரையிலும் மேம்பாலங்களிலும் நின்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தரிசித்தனர். இந்த விழாவை முன்னிட்டு மதுரை நகரம் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
கள்ளழகர் வைகையில் இறங்கும் வரலாறு:
சித்திரைத் திருவிழா மதுரையில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
மதுரையின் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் தம் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்குத் தாமதமாக வருகிறார்.
அதற்குள் மீனாட்சியின் திருமணம் முடிவடைந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த அழகர்வைகை ஆற்றில் நீராடிவிட்டு தங்கையைக் காணாமலே வீடு திரும்புகிறார். இந்த நிகழ்ச்சியே திருவிழாவாகக் கொண்டாடப் பெறுகிறது.
இந்து சமயத்தில் பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்தாலும் சைவம், வைணவம் என இரு பிரிவுகளுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாடுகளும், ஒற்றுமையின்மையும் இருந்து வந்தது. சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என சமயங்கள் தொடர்புடையனவாக மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இரு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும்படியாக விழா மாற்றியமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், தான் வருவதற்குள் திருமணம் முடிந்துவிடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பிவிடுவதாகவும் புதிய கதையும் புனையப்பட்டது. ஆனால், மண்டூக மகரிசிக்கு சாபவிமோசனம் தரவே அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே பழைய பு��ாணக்கதையாகும் - விக்கிபீடியா
2 கருத்துரைகள்:
இந்த வருடம் திருவிழாக்கோலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை...
நல்ல தகவல்கள்.... காணொளியும் பார்க்க வேண்டும்..... பார்க்கிறேன்.