தமிழகத்தின் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஓன்று, மதுரை சித்திரை திருவிழா. சைவமும் வைணவமும் இணைந்து நடத்தும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இதில் முதலில் வருவது மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழா.
நாளை (14–ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு ஆயிரம்பொன் சப்பரத்தில் கருப்பண்ணசுவாமி கோவிலில் பெருமாள் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 6 மணிக்கு தங்க குதிரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். இந்த வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவது உண்டு.
இந்த விழா நிறைவு பெற்றதும் அழகர் கோவில் விழா தொடங்குகிறது. இந்த ஆண்டும் மீனாட்சி அம்மனின் பட்டாபிசேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவை விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகராக மாறி நேற்றுக் காலை கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
வழிநெடுகிலும் இருந்து 463 மண்டக படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். இரவு முழவதும் பக்தர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்ட கள்ளழகர், இன்று காலை ஆறுமணி அளவில் மூன்று மாவடி வந்தார். மூன்று மாவடியில் எதிர்சேவை துவங்கியது. அப்போது ஆயிரக்கணக்கான பெண்களும், பக்தர்களும் குவிந்து கள்ளழகரை எதிர்சேவை செய்து வணங்கி வரவேற்றனர்.
தொடர்ந்து புதூரில் எதிர்சேவை நடைபெற்றது. இன்று மாலை மாநகராட்சி அலுவலகம் அருகே கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர் இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு வருகிறார். அங்கு பெருமாளாக திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை சாற்றிக் கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.
மதுரைக்கு வந்த கள்ளழகரை இப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
நாளை (14–ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு ஆயிரம்பொன் சப்பரத்தில் கருப்பண்ணசுவாமி கோவிலில் பெருமாள் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 6 மணிக்கு தங்க குதிரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். இந்த வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவது உண்டு.
அழகர்மலையில் இருந்து கள்ளழகர் புறப்பட்டது முதல் மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமே காணப்படுகிறது. அவர்களை கவரும் வகையில் பல்வேறு இடங்களில் நீர் மோர், குளிர்பானங்கள் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. நாளை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் அங்கிருந்து வண்டியூர் வீரராகபெருமாள் ஆலயம் செல்கிறார். மறுநாள் (15–ந்தேதி) காலை 6.30 மணிக்கு ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
காலை 9 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் தேனூர் மண்டபம் வருகிறார். அங்கு கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இரவில் ராமராயர் மண்டபத்தில் தங்கும் அவர் பக்தர்களுக்கு தசாவதார காட்சி தருகிறார்.
நள்ளிரவு 12 மணி முதல் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது உண்டு. 16–ந்தேதி காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் புறப்படும் அவர் இரவு 11 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் வருகிறார். அங்கிருந்து 17–ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் மீண்டும் தன் இருப்பிடம் நோக்கி பயணம் செய்கிறார். அப்போதும் வழிநெடுக பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 18–ந் தேதி காலை 10.30க்கு மணிக்கு அழகர்மலை செல்கிறார். (மாலைமலர்)
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பற்றிய பதிவுக்கு:
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பற்றிய பதிவுக்கு:
5 கருத்துரைகள்:
உங்கள் பதிவும் படங்களும் இன்னும் விளக்கமாக இருந்திருக்கலாம் மதுரை வாசிகளுக்கு எல்லாம்விளங்கி இருக்கலாம். ஆனால் என் போன்றவருக்கு இன்னும் விளக்கம் தேவை படங்களைப் பார்த்து புரிந்துகொள்ள படங்களின் அடியில் என்னவென்று கூறி இருக்கலாம் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது பற்றிய கதையையும் சொல்லலாம்.வழிகாட்டும் பதிவுகளில் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பு உண்டல்லவா. வாழ்த்துக்கள்.
எனக்கு மிகவும் பிடித்த திருவிழா இது மூன்று முறைக்கு மேல் வந்திருக்கிறேன்
இந்த வருடம் வர வேண்டும் என்று நினைத்திருந்தேன். நன்றி தங்கள் பகிர்வுக்கு
படங்கள் வெகு அருமை
படங்கள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
ஒரு முறையாவது நேரில் காண வேண்டும்..... எப்போது முடிகிறதோ....
தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பிரகாஷ்.