வணக்கம் வலை நண்பர்களே,
பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் அக்கௌன்ட் வைத்திருக்கும் பலருக்கும் தொல்லையாக இருப்பது நண்பர்கள் விடுக்கும் Game request.
Game request-ஐ தொல்லையாக கருதுவதற்கு காரணம்:
தேவையில்லாமல் notification வரும்.
Games விளையாட நேரம் இருக்காது.
Games விளையாட பிடிக்காது.
இணைய இணைப்பு வேகம் மெதுவாக இருக்கும்.
என தொல்லைக்கான காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்வாறு நம்மை தொல்லைப்படுத்தும் Game request-ஐ முழுமையாக தவிர்க்க, தடுக்க இயலுமா எனில் ஓரளவு தடுத்து விடலாம்.
Game request-ஐ எப்படி தடுப்பது (BLOCK) எனப் பார்ப்போமா?
இரண்டு வகையான தடுப்பு முறைகள் உள்ளது.
அதில் முதல் முறையில் நண்பர்களின் பெயரை block செய்வதன் மூலம் தடுக்கும் முறை.
அவற்றை எப்படி செய்வது என கீழே பார்ப்போம்.
STEP -1:
உங்களின் பேஸ்புக் பக்கத்தில் வலது மேல் மூலையில் இருக்கும் கீழ் நோக்கிய அம்புக்குறியை (அல்லது சக்கரம் போற icon-ஐ) கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் பக்கத்தில் settings என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
(காண்க படம் - 1)
STEP - 2:
Settings என்பதை கிளிக் செய்தால் கீழே படத்தில் இருப்பது போல பக்கம் ஓபன் ஆகும். அதில் இடது பக்கம் உள்ள பட்டியலில் Blocking என இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
(காண்க படம் - 2)
STEP - 3:
Blocking என்பதை கிளிக் செய்தால் Manage blocking என்ற பக்கம் ஓபன் ஆகும். அதில் Restricted List, Block users, Block app invites, Block event invitations, Block apps என வரிசையாக இருக்கும். அவற்றில் Block app invites என்பதில் காட்டப்படுகிற கட்டத்தில் games request தருகிறவர்களின் பேஸ்புக் பெயரை டைப் செய்ய வேண்டும்.
(காண்க படம் - 3)
பெயரை டைப் செய்து அவரை தேர்வு செய்தபின் கீழே படத்தில் உள்ளவாறு காட்டும்.
அவர் games request தருவதை நிறுத்தி விட்டால் அவரை unblock செய்து விடலாம்.
(காண்க படம் - 4)
இந்த முறை மூலம் games request தருகிற நண்பர்களின் பெயரை கொடுத்து அவர்களிடமிருந்து வரும் games அழைப்பை முற்றிலும் தடுத்து நிறுத்தலாம்.
இரண்டாவது முறை:
மேலே கொடுக்கப்பட்ட வழிமுறையில் Step - 2 வரை செய்து கொள்ளுங்கள்.
STEP - 3:
Blocking என்பதை கிளிக் செய்தால் Manage blocking என்ற பக்கம் ஓபன் ஆகும். அதில் Restricted List, Block users, Block app invites, Block event invitations, Block apps என வரிசையாக இருக்கும்.
அவற்றில் Block apps என்பதில் கட்டப்படுகிற கட்டத்தில் நீங்கள் block செய்ய விரும்பும் game பெயரை டைப் செய்து தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் அந்த game request உங்களுக்கு வராது.
(காண்க படம் - 5)
நான் Scribd, Criminal Case, Candy crush saga என மூன்று விளையாட்டுகளை block செய்துள்ளேன். இது போல உங்களுக்கு தொல்லையாக உள்ள game request-ஐ தடுக்கலாம்.
இவ்வாறு செய்த பின்னும் game request வந்தால் அதைத் தடுக்க வேற வழியே இல்லை.... பேஸ்புக்கே வேணாம்னு நீங்க அக்கௌன்ட்டை க்ளோஸ் பண்ணிட வேண்டியது தான்... :-)
15 கருத்துரைகள்:
ஆஹா,அருமையான ஆளைத்தேர்ந்தெடுத்திருக்கீங்க! :)
very useful... thanks
அன்போடு அனுப்பும் வேண்டுகோளை யாராவது ப்ளாக் பண்ணுவாங்களா.. (இத படிச்சதுக்கப்புறம் நம்மள அடிக்க ஒரு கும்பல் வருமே, எங்க காணோம்?)
இலியாஸ் தொல்லை தாங்கலே ன்னு மறைமுகமா சொல்லிட்டீங்க..
"கண்டுகொண்டேன்..... கண்டு கொண்டேன்....."
நன்றி.
Boss, super.... Ungalukku kodi punniyam ponga !
அப்பாடா... நன்றி...
மிகவும் உபயோகமான தகவல்! பகிர்வுக்கு நன்றி!
மிகவும் உபயோகமான தகவல்! பகிர்வுக்கு நன்றி!
THANK YOU MR PRAKASH
THANK YOU MR PRAKASH
இது கண்டிப்பாகத் தேவை...
பகிர்வுக்கு நன்றி...
மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார் இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
இன்னக்குத்தான் உங்க பக்கம் வந்தேன்.மிகவும் உபயோகமான தகவல் தெரிந்து கொள்ள முடிந்தது. இன்னொரு சந்தேகம் கேக்கவா? நம்ம பக்கம் ஃபாலோவரா சேர வரவங்களுக்கு அந்த ஆப்ஷன் என் பக்கம் இல்லியே என்ன பண்ணனும்?சொல்லித்தர முடியுமா?
தெய்வம் அண்ணே நீங்க..