இன்னைக்கு மதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும் பதிவுல மதுரையை சுத்தி உள்ள விசயங்களைப் பத்தி பாக்க போறோம்.
நம்பிக்கை தந்த வைகை:
மதுரையில் நிலத்தடி நீர் அபாய அளவைத் தாண்டி கீழே போன நிலையில், நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் இந்த வருட பருவ மழையும் ஓரளவு பொய்க்கவில்லை. அதோடு அதிசயமாக இரு வாரங்களாக வைகையிலும் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இப்படியே பருவமழை காலம் முடியும் வரை மழையும், ஆற்றில் தண்ணீரும் வந்தால் மதுரையின் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும்.. ஆண்டவா.... மதுரையை வறட்சியிலிருந்து காப்பாற்றும்....
பசுமை இல்லா பசுமை பூங்கா:
மதுரை தல்லாகுளம் அருகே பசுமை பூங்கா (ECO PARK) உள்ளது. அங்க கடந்த மாதம் போயிருந்தேன்... பேருக்கு ஏத்த பசுமையை தேட வேண்டியிருந்தது. தரையில் வளர்க்கப்பட்ட புற்கள் காய்ஞ்சு கட்டாந்தரை ஆகியிருந்தது. அங்குள்ள செயற்கை நீரூற்றில் தண்ணீர் வராட்டியும், புல் தரையில் அமர்ந்து பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. ஆனால் இம்முறை போகும் போது புல்லை தேடியே நேரம் கடந்து விட்டது. பூங்காவை பராமரிக்க ஆட்கள் இருந்தும் புல்லை பராமரிக்கவில்லை. புல்லுக்கான தண்ணீர் தயார் செய்து தர முடியாத நிலையில் மதுரை மாநகராட்சி உள்ளதா???
ஒண்ணு இங்க இருக்கு... இன்னொண்ணு எங்க?
மதுரை ரயில்வே ஜங்சனில் கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒவ்வொரு பிளாட்பாரத்துக்கும் போக வர ரெண்டு மேம்பால நடைபாதை இருந்துச்சு. ஒண்ணு பழைய இரும்பு பாதை... இன்னொண்ணு கான்கிரீட் பாதை. அதுல இரும்பு மேம்பால பாதையை துண்டிச்சுட்டாங்க.. அதுக்கு பதிலா கான்கிரீட் பாதைல எக்ஸ்கலேட்டர் போட்டிருக்காங்க... அதனால சிரமம் குறைஞ்சதான்னா இல்லை... ஜங்சன்ல இருக்கற எட்டு பிளாட்பாரத்துக்கும் போக வர இந்த ஒரு பாதையை தான் உபயோகிக்க வேண்டி இருக்கு. அதுவும் மூணு இடத்துல மட்டுமே எக்ஸ்கலெட்டர் வசதி இருக்கு. வடக்கு பக்கமிருந்து தெற்கு பக்கம் வர போக மக்கள் இந்த ஒரு பாதையை மட்டும் உபயோகபப்டுத்த வேண்டி இருக்கு. இதனால குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. எக்ஸ்கலேட்டர் வசதிக்காக மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியதே மிச்சம்.... பழையபடி இரண்டு மேம்பால நடைபாதை கிடைக்குமா?
ஸ்கூல் பஸ், காலேஜ் பஸ்:
"இந்த பேருந்தில் வேக கட்டுப்பாடு கருவிப் பொருத்தப்பட்டுள்ளது" என்ற வாசகம் இல்லாத ஸ்கூல் பஸ், காலேஜ் பஸ் இருக்காது. இந்த வாசகம் பேருந்தில் எழுதியிருந்தால் தான் எப்சி, பெர்மிட் கிடைக்கும். ஆனா, இந்த பஸ்கள் போற ஸ்பீடை கவனிச்சா வேக கட்டுப்பாடு கருவி இருக்குதான்னு டவுட் வரும். ஏன்னா 50 - 60 கிமீ வேகத்துல தான் கண்ட்ரோல் செஞ்சிருபபாங்க. இந்த வேகம் சிட்டி எல்லைக்குள் ஓட்டும் போது கண்டிப்பாக அதி வேகமாத்தான் இருக்கும். சிட்டியில் இருக்கற எல்லா ஏரியாவுக்கும் பஸ் வசதி இருப்பதால் குறுகலான சாலையிலும் செல்ல வேண்டியிருப்பதால் அவசியம் வேகத்தை குறைத்து கவனமாக செல்ல வேண்டும். ஆனால் சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரியை அடைய வேண்டிய நெருக்கடியும், சாலை ட்ராபிக்கும் பஸ் ட்ரைவரை வேகமாக ஓட்ட வைக்கும் காரணங்களாக இருக்கிறது. இந்த வேக பிரச்சனை மதுரையில் மட்டுமல்ல, எல்லா ஊரிலும் இருக்கும் பொதுப் பிரச்சனையே..
முந்தைய பகுதிகள்:
மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று!
15 கருத்துரைகள்:
வைகையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மணலாகவே பார்த்துப் பழகிய ஆறு!
மதுரையின் சிறப்புக்களை எங்க ஊரில் இருந்தே உங்களின் இந்த பதிவின் உதவியால் ரசிக்க முடிக்க முடிகிறது! நன்றி!
மதுரைக்கு வந்த சோதனை...
சமூக சிந்தனை பாராட்டுக்குறியது நண்பரே எனது தொடர் பதிவு காண்க,,,
மதுரை பற்றிய தகவல்கள் -
நல்ல தொகுப்பு!
தொடருங்கள்!!
தமிழ்மணம் வாக்கு 3.
வைகையில் தண்ணீர்... ஆஹா... அருமை...
நல்ல பகிர்வு....
ஒரே ஒரு பாலம் மிகவும் சிரமம் தான்...
மதுரை வளமாகட்டும்..
ஒழுங்காகப் பராமரித்தால் நன்றாய் இருக்கும்,,ஆனால் அதைத்தானே செய்ய மாற்றாங்க!! மதுரையில் மட்டுமல்ல..பல இடங்களிலும் நிலை இப்படித்தான்
பதிவினைப் படித்தேன், ரசித்தேன். மதுரையைப் பற்றிய பறவைப் பார்வை முழுமையாக இருந்தது. பாராட்டுகள்.
நண்பரே தங்களை வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன் வருகை தரவும்
தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
மாநகராட்சி வளாகத்தில் இருக்கும் எக்கோ பார்க்கின் நிலையே இப்படியென்றால் ,மற்ற பூங்காக்கள் எப்படி இருக்கும் ?
த ம 6
மதுரையைப்பற்றி மிகவும் அழகான அருமையான தகவல்கள். பாராட்டுக்கள்.
அன்புடையீர்,
வணக்கம்.
தாங்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றியபோது, என்னைப்பற்றியும் என் வலைத்தளத்தினைப்பற்றியும் பாராட்டி சிறப்பித்து அறிமுகம் செய்து எழுதியிருந்தீர்கள்.
என்னைப்பற்றிய இவ்வாறான வலைச்சர அறிமுகங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டதனால், இப்போது என் வலைத்தளத்தினில் அவற்றைபற்றிக் குறிப்பிட்டும், என்னை அறிமுகம் செய்துள்ள வலைச்சர ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறியும் ஒருசில தொடர்பதிவுகளாக இப்போது வெளியிட்டு வருகிறேன்.
இன்றைய பதிவினில் தங்களின் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டு ���ருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/01/2-of-16-2-6.html
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in