முன் குறிப்பு:
ஒரு பதிவரின் பதிவில் கருத்துரை மட்டுறுத்தல் இருந்தும் நான் பகிர்ந்த கருத்துரைகள் அந்தப் பதிவரால் வெளியிடப்பட்டது. அப்படியிருக்கையில் கீழ்க்கண்ட கதை சற்று சுருக்கமாக அங்கே கருத்துரையில் பதிந்திருந்தேன். ஆனால் கருத்துரையில் வெளியிடப்படவில்லை. ஆபாசமாகவோ, நா கூசும் வார்த்தைகளோ, இல்லாமல் இருந்தும் வெளியிடப்படாமல், மாறாக மட்டுறுத்தல் மூலம் எனது கருத்துரை நீக்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய காரணம் "சைவம் சாப்பிடும் பழக்கம் கொண்ட எனக்கு இந்த சைவ/அசைவ கருத்துரையை வெளியிட விருப்பம் இல்லை" என்பதாகும். ஆகையால் எனது கருத்துரை அன்றே வெளியாகி இருந்தால் இப்போது இந்தப் பதிவுக்கு அவசியமே இருந்திருக்காது. இப்போது இந்த தகவலைக் கூற காரணம், எனது இந்தப் பதிவை ஒருவர் பதிவுலகில் அநியாயம் என்ற தலைப்பில் பதிவாக பகிர்ந்ததே காரணம். சரி, வாங்க பந்தி கதைக்கு போகலாம்.

*************
ஒரு ஊர்ல மக்கள் பெருமையாய் போற்றும்படி, காசி என்பவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வதோடு, அவர்களுக்கு தமது வீட்டில், நிலத்தில் வேலையும் கொடுத்து வந்தார். அவர்களும் ஆர்வமுடன் வேலைகளை செய்து அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் கண்டு, முதலாளிக்கும் நற்பெயரை வாங்கித் தந்தார்கள். அவர்களுக்கு அடிக்கடி விருந்து வைத்து நன்முறையில் உபசரிப்பார். மக்களும் வயிறார உண்டு திருப்தியாக காசியை போற்றி புகழ்ந்து செல்வார்கள்.