வணக்கம் வலை நண்பர்களே....
கடந்த வருடங்களில் சென்னை, மதுரையில் பதிவர் சந்திப்பு திருவிழா வெகு சிறப்பாக நடந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் (2015) புதுக்கோட்டையில் பதிவர்களின் விழா நடைபெற உள்ளது.
பட்டிமன்ற பேச்சாளர், மூத்த பதிவர் திரு. முத்துநிலவன் ஐயா தலைமையில் புதுக்கோட்டை பதிவர்கள் ஒருங்கிணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக கவனித்து வருகிறார்கள்.