CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



புதுக்கோட்டையில் சங்கமிக்க வாங்க தோழமைகளே.....

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

வணக்கம் வலை நண்பர்களே....
கடந்த வருடங்களில் சென்னை, மதுரையில் பதிவர் சந்திப்பு திருவிழா வெகு சிறப்பாக நடந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் (2015) புதுக்கோட்டையில் பதிவர்களின் விழா நடைபெற உள்ளது. 

பட்டிமன்ற பேச்சாளர், மூத்த பதிவர் திரு. முத்துநிலவன் ஐயா தலைமையில் புதுக்கோட்டை பதிவர்கள் ஒருங்கிணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக கவனித்து வருகிறார்கள்.


விழா நடைபெறும் நாள்: அக்டோபர் 11 - 2015
விழா நடைபெறும் நேரம்: காலை ஒன்பது மணி முதல்...
விழா நடைபெறும் இடம்: ஆரோக்கியமாதா மக்கள் மன்றம், புதுக்கோட்டை

பதிவர்களே விழாவுக்கான தொழிநுட்ப உதவிகளை செய்து வரும் திண்டுக்கல் தனபாலன், பதிவர்கள் தங்கள் வருகையை எளிதில் தெரிவிக்க ஒரு விண்ணப்ப படிவம் தயார் செய்துள்ளார். அப்படிவத்தில் தங்களை இணைக்க இங்கு செல்லவும். நானும் என் வருகையை பதிந்து விட்டேன் நண்பர்களே.. பதிவர்களின் வருகையை தனது பதிவில் தினம் தினம் அப்டேட் செய்து வருகிறார் டிடி. அதன் விவரங்களைக் காண இங்கே செல்லுங்கள்.

“வலைப்பதிவர் திருவிழா-2015-இல் கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன-
(1) “வளர்தமிழ்ப் பதிவர் விருது”
(தமிழ்மொழி வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களித்து வரும் பதிவர்)

(2) “மின்னிலக்கியப் பதிவர் விருது” 
(கதை,கவிதைப் படைப்புகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)

(3) “வலைநுட்பப் பதிவர் விருது” 
( வலைப்பக்கம் எழுத உதவியாகத் தொழில்நுட்ப விளக்கங்கள் எழுதிவரும் பதிவர்)

(4) “விழிப்புணர்வுப் பதிவர் விருது” 
(சமூக விழிப்புணர்வுப் பதிவுகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)

(5) “பல்சுவைப் பதிவர் விருது” 
(திரைப்படம், ஊடகம் செய்திகளைச் சுவைபட எழுதும் பதிவர்)
மேற்காணும் பதிவர் விருதுகள், விழாவிற்கு வருவோரில் இருந்தே
வருவோரின் கருத்தறிந்தே வழங்கப்படும் என விழாக் குழுவினர் தெரிவித்து உள்ளார்கள். இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிய இங்கு செல்லவும்.

மேலும் விழாவில் பதிவர்களின் விவரங்கள் அடங்கிய கையேடு வழங்க ஏற்பாடு செய்திருப்பதால் உங்களின் வருகையை உறுதி செய்யும் படிவத்தில் பிற குறிப்புகள் எனும் கட்டத்தில் உங்களைப் பற்றிய மேலதிக விவரங்களை சேர்க்கவும்,  

மேலும் விழாவில் புத்தகம்,  குறும்படம் வெளியீட விருப்பம் உள்ள பதிவர்கள் [email protected]  எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். 

விழா சிறப்பாக நடைபெற பதிவர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கலாம். அதற்கான விவரங்களை இப்பதிவில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

பதிவுலக நண்பர்களே, ஒன்று திரள்வோம் புதுகையில்... புதிய நட்புகளை பெறுவோம்.


12 கருத்துரைகள்:

Vijayan Durai said... Best Blogger Tips

Super :) vila inithu nadaipera vaalthukkal. Parisu pera pokum pathivarkalukku adcance vaalthukkal.

தனிமரம் said... Best Blogger Tips

விழா சிறக்க வாழ்த்துகள்! தமிழ்வாசியும் வலையில் இருக்கின்றாங்கள் மகாஜனங்களே அவர் முகநூலில் மூழ்கவில்லை!ஆவ்வ்வ் கிடா வெட்டியாச்சு[[[

மகிழ்நிறை said... Best Blogger Tips

விழாவினை சிற்பிக்க தாங்கள் செய்த மேலான பங்களிப்புக்கு புதுகை விழாக்குழுவின் சார்பாக என் நன்றிகள் சகோ:)

Nagendra Bharathi said... Best Blogger Tips

வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips

பெயரினைப் பதிவு செய்துவிட்டேன் நண்பரே
நன்றி
தம =1

Thulasidharan V Thillaiakathu said... Best Blogger Tips

சந்திப்போம்....சிறப்பிப்போம் நண்பரே!

balaamagi said... Best Blogger Tips

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said... Best Blogger Tips

என் பெயரினைப் பதிந்துவிட்டேன். புதுக்கோட்டையில் சங்கமிப்போம்.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

ஊரில் இருந்து வந்தவுடன் உங்கள் தளத்தின் பதிவு கண்டு மகிழ்ச்சி... தங்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவை... நன்றி...

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said... Best Blogger Tips

அய்யா வணக்கம். தங்களின் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அப்படியே இந்த விழாவுக்கென்றே தொடங்கப்பட்ட புதிய வலைப்பக்கத்தையும் பார்த்து, அதையும் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்.-http://bloggersmeet2015.blogspot.in/ நன்றி.

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said... Best Blogger Tips

//ஒன்று திரள்வோம் புதுகையில்... புதிய நட்புகளை பெறு��ோம்.// உண்மை! சென்ற பதிவர் சந்திப்பின்மூலம் பல நண்பர்களைப் பெற்றேன்.

த.ம.7

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1