விஜய் சேதுபதியின் றெக்க.......
.
இந்த வருசத்துல விஜய் சேதுபதி அடிச்ச தொடர் ஹிட்டுக்கு ப்ரேக் கொடுக்க ரிலீஸ் ஆகியிருக்கும் படமே றெக்க...
.
கதைன்னு சொன்னா காதலர்களை சேர்க்க, கல்யாணம் செய்து வைக்க என சிம்பிள்ஒன் லைன்...
ஆனா அந்த ஒன் லைனுக்கு வலு சேர்க்கும் காட்சிகள் கோர்வை இல்லாமல், கும்பகோணம், மதுரை, கோவை என பயணிக்கிறது...
.
ஆக்சன் படம்னு சொல்ல முடியாது...
ரொமான்ஸ் படம்னு சொல்ல முடியாது..
சென்டிமென்ட் படம்னு சொல்ல முடியாது...
அட, விஜய் சேதுபதியின் படம்னு கூட சொல்ல முடியாது...
.
விர்ரு...விர்ரு...ன்னு ஸ்டார்டிங் பாட்டுல இருந்து படத்துல வர்ற எல்லா பாட்டுமே இடை சொருகல் தான்...
.
ஆக்சன் என விஜய் சேதுபதி ஒரே அடியில் வில்லன்களையும், பல சுமோ, குவாலிஸ் கார்களை நொறுக்குகிறார்.. ஆனா அவருக்கு பார்மாலிட்டிக்கு கூட சின்ன காயம் படல...ன்னு யோசிச்சுட்டு இருக்கும் போது கிளைமாக்ஸ் சண்டையில் கன்னத்தில் லேசா ஒரு கீறல் மட்டுமே விழுகுது...
.
ரொமான்ஸ் படம்னு சொல்ல முடியாதுன்னு மேல சொல்லியிருக்க காரணம் நாயகி லட்சுமி மேனன் தான்... பிகர் ரேஞ்சை ஓவர் டேக் செஞ்சு ஆண்ட்டி ரேஞ்சுக்கு வளர்ந்துட்டார். வேதாளம் படத்துலேயே அப்படித்தான்... மாறனும்.. பழைய கும்கி லட்சுமி மேனனா மாறனும்.. அப்பத்தான் நெறைய பேரு ஐ லவ் யு சொல்வாங்க. (படத்துல ஐ லவ் யு சொல்ல மட்டுமே வர்றாங்க..ம்ஹும்.)
.
சென்டிமென்ட் படமா... ம்ஹும்... விஜய் சேதுபதி ட்யுஷன் டீச்சர் மாலா அக்கா ஐ லவ் யு-ன்னு சொல்லி, அவங்க காணாம போயி கடைசி கிளைமாக்ஸில் திரும்ப, படத்துல திருப்பம்ங்கற பேர்ல திரும்ப வர்றாங்க...
இதுவரைக்கும் எழுதியிருக்கறது ஏதாச்சும் புரியுதா... புரியுதுன்னா படத்தை பத்தி சரியா சொல்லியிருக்கேன்னு நெனச்சுக்காங்க.. புரியாட்டின்னா... படத்துல அப்படியொண்ணும் சொல்லிக்கற அளவுக்கு ஒர்த் காட்சிகள் எதுவுமே இல்ல...
.
மொத்ததுல விஜய் சேதுபதி கமர்சியல் ஆக்சன் ஹீரோவா வலம் வரணும்னா நல்ல கதை கிடைக்கணும்.. கிடைச்சா நல்ல டைரக்டர் கிடைக்கணும்.. அப்புறம் நல்ல ஹீரோயின் கிடைக்கணும்.. அம்புட்டுதேன்...
.
அப்புறமா, விஜய் சேதுபதி ட்ரிம் மீசை, தாடியில அழகா சிரிக்கறார்... செம...
.
அப்புறமா கட்டக்கடைசியா ஒண்ணு சொல்லிக்கறேன்...
நெட்டுல திருட்டு பிரிண்ட் தான் பார்ப்பேன்னு அடம் புடிக்கறவங்க படத்தை பார்வர்டு செஞ்சு கடைசி அஞ்சு நிமிசத்தை மட்டும் பாருங்க... ஏன்னா Making the Film காட்சிகள் ஓடும்... அதுவே படம் பார்த்த திருப்தியை தரும்...
தேவையில்லாம நெட் டேட்டாவை வீணாக்காதிங்க...
.
விஜய் சேதுபதியின் தொடர் ஹிட் றெக்கை, றெக்க படத்துல ஒடஞ்சு போச்சு..
0 கருத்துரைகள்: