ரெமோ...
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் இரண்டாவது படம் ரெமோ...
ரசிகர்களை கவர்ந்துள்ளாரா ரெமோ நர்ஸ்? பார்ப்போமா?
ரஜினி, அஜித் போல பெரிய சினிமா ஸ்டாராக வேண்டும் என்ற கனவில் சந்தர்ப்பவசமாக நர்ஸ் கெட்டப்பில் மாறுகிறார்.
அப்படியே கீர்த்தி சுரே்ஷிடம் முதல் பார்வையிலே காதலில் சிக்க, அந்த சூழலில் கீர்த்தி சுரேஷ்க்கு இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் நடக்க, மனம் கலங்கிய சிவா, அதையும் மீறி அவரை தன் காதல் வலையில் வீழ்த்தி கடைசியில் எப்படி கை கோர்க்கிறார் என்பதே கதை..
.
பெண் கெட்டப்பில் பலரும் நடித்திருந்தாலும் SK - ன் ரெஜினா மோத்வாணி கெட்டப் சற்று அசந்தாலும் ஆண்கள் மனதை கொள்ளையடித்து விடும் அப்படியொரு அழகு.. (தியேட்டர்ல ஒருத்தர் கமெண்ட் இது...)
.
டாக்டராக கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்த படங்களில் பெர்பார்மன்ஸ் இம்ப்ரூவாக உதட்டை சுழித்தும், கண்களிலும் நடித்துள்ளார்.
.
ஹாஸ்பிடல் காட்சிகளில் இயல்பான ரெமோ நர்ஸாக நடித்துள்ளார் SK. ஆனால் ஊசி போடவோ, கட்டு போடவோ முயற்சிக்கவில்லை. அதெல்லாம் தேவையில்லாத காட்சிகள் இல்லையென டைரக்டர் முடிவு செய்திருப்பார் போல.. குழந்தைகளுக்கு பணிவிடை செய்யும் நர்ஸாக மட்டுமே முடிவு செய்துள்ளார்.
.
கீர்த்தி சுரேஷை அரேஞ்ச்டு மேரேஜ் என்பதிலிருந்து, லவ் மேரேஜ் தான் பெஸ்ட் என ரெமோ அடிக்கடி நினைவூட்ட, கீர்த்தியும் மெல்ல SK காதல் வலையில் விழுகிறார். ஆனாலும் கீர்த்தி கெத்தை விடாமல் லவ் இல்லாதது போல போக்கு காட்டுகிறார். இறுதியில் கெத்து காலியாகி ஐலவ் யூ சொல்கிறார், ரெமோ யாரென அறிந்த பின்பும்...
.
படத்தின் முதல் பாதியில் ரெமோ நர்ஸ் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
இரண்டாவது பாதியில் SK பட்டையை கிளப்பியிருக்கிறார்.
.
SK அம்மாவாக வரும் சரண்யா வழக்கம் போல மனம் கவரும் அம்மாவாக சிறப்பாக நடித்துள்ளார்.
.
காமெடிக்கு என சதீஷ், மொட்டை ராஜேந்திரன். ஆனால் காமெடி காட்சிகள் என சிறப்பாக இல்லை. அவ்வப்போது SK மட்டுமே பஞ்ச் டயலாக்கில் சிரிக்க வைக்கிறார்.
.
அனிருத் இசையில் இரைச்சலும் இல்லை. ரசிக்கும்படியும் இல்லை. கடைசி பாடலாக வரும் தாவுயா நோவுயா பாடல் மட்டுமே ரசிக்கும் படியாக, தியேட்டரை கலகலக்க ��ைக்கிறது. மற்ற பாடல்கள் சும்மா மட்டுமே.
.
அப்புறம் கடைசியாக ஸ்ரீதிவ்யா வருகிறார். அவர் மூலம் SK தனது சினிமா கனவை நனவாக்குகிறார். அவரை இயக்குகிறார் K.S ரவிக்குமார்.
.
சிவகார்த்திகேயனின் வழக்கமான படமாக இருந்தாலும்
ரெமோ நர்ஸ் என்ற புதிய முயற்சிக்காக மட்டுமே ரெமோ காவியத்தை ரசிக்கலாம்.
.
படத்தில் இடையிடையே ரஜினி ரசிகர்களையும், அஜித் ரசிகர்களையும் கவர்கிறார். எப்படி என்பதை திரையில் காண்க..
.
மற்றபடி அந்த லாஜிக், இந்த லாஜிக் என உங்களது சினிமா கண்ணாடி மூலம் பார்த்தால் ரெமோவை ரசிக்க முடியாது.. ஆகவே அந்த கண்ணாடியை கழற்றிவிட்டு ரெமோவை ரசியுங்கள்.
.
மற்றபடி சிவகார்த்திகேயன், பக்கா கமர்சியல் ஹிட்டுக்கு இன்னும் சிறந்த கதையை தேட வேண்டும்.
5 கருத்துரைகள்:
படம் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. தங்கள் பதிவு ரசிக்க வைத்தது நன்றி
படம் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. தங்கள் பதிவு ரசிக்க வைத்���து நன்றி
படம் சூப்பர் தல
படம் சூப்பர் தல
படம் எப்படியோ, ஆனா சொல்லப்பட்ட கருத்து மி���வும் ஆபத்தானது. நிச்சயமான பெண்ணை துரத்தி அவள் மனதை மாற்றுவது, அடுத்த படம் அடுத்தவர் மனைவியை துரத்தி தூக்கி வர மாதிரி எடுத்தா, இன்னமும் சிவக்கார்த்தீக்கு கோடி சம்பளம் கிடைக்கும், வாங்கிட்டு மேடையிலே அழுவலாம்.