வணக்கம் நண்பர்களே...
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பின் கீழ் 100 பாடல்கள் எழுதி தனது தயாரிப்பின் கீழ் வெளியிடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அத்திட்டத்தின் மூலம் 100 பாடல்களை 100 இசையமைப்பாளர்கள் இசையமைத்து, 100 பாடகர்கள் பாடி, 100 இயக்குநர்கள் இயக்க இருக்கிறார்கள். இந்த நூறு பாடல்களும், வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்களாக இருக்கும் என கவிப்பேரரசு தெரிவித்துள்ளார்.
"நாட்படு தேறல்" தலைப்பில் கவிப்பேரரசு எழுதி முதல் பாடலாக "நாக்குச் செவந்தவரே" என ஆரம்பிக்கும் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு வாகு மசன் என்ற பெண் இசையமைப்பாளர் இசையமைத்து அவரே பாடியும் ,நடித்தும் உள்ளார். இப்பாடலை இயக்கியதும் ஒரு பெண் இயக்குனரே. அவர் "வட சென்���ை" என்ற படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி ஆவார்.
காதலித்துக் கைவிட்டவனைக் காதலி கேட்கும் கேள்விகள் என Rock-Folk முறையில் உருவாகியுள்ள இப்பாடலில், காதலர்களின் நெருக்கத்தையும், காதலின் ஆழத்தையும், மிக இயல்பாக காட்சியமைப்பின் மூலம் படைத்துள்ளார்கள்.
வைக்கப் போர்ப் படப்புக்குவடஇருட்டு மூலையிலஅக்கப்போர் செஞ்சகதைஅய்யனுக்கு மறந்திருச்சோ?
ஆண்களின் குணத்தையும் இப்பாடல் வரிகளில் நக்கலாக அதே சமயம் பெண்ணின் ஏக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் கவிப்பேரரசு.
ஆறுசரம் சங்கிலியோஅட்டிகையோ கேக்கலையேமஞ்சக் கயித்துக்குமனசுக்குள்ள அரிக்குதய்யாஆம்பளைக சகவாசம் அடுத்தொருத்தி வாரவரைக்கும் பொம்பளைக சகவாசம்புதைகாடு போறவரைக்கும்
பாடலின் காட்சியமைப்புகள் மிக அழகாக எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இப்பாடல் முழுவதும் Iஐபோன் மூலமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பான ஒன்று. லாங் ஷாட் ஆங்கிள், டாப் ஆங்கிள், என ஐபோன் மூலம் சிறப்பாக பாடலை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
கவிப்பேரரசு அவர்களின் தமிழ் கொஞ்சும் வரிகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம். இந்தப் பாடல் அவரது யூடுப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Images & details courtesy: Vairamuthu Official
3 கருத்துரைகள்:
அருமையான பாடல், மருதத்திணை!
வணக்கம் பிரகாஷ் சகோ.
மீண்டும் வலைத்தளத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
Gambling in Las Vegas and the future of entertainment - Dr.
The Gambling Council says the 경주 출장마사지 casino is a serious 의왕 출장안마 business for 울산광역 출장샵 the people who love to gamble. There are casino 여주 출장안마 buffets around the world, but 속초 출장마사지 the